குத்தாட்டத்தை மறுத்த தமன்னா
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேல் பயணித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை தமன்னா.
இவர் தமிழில் பையா திரைப்படத்தில் தன்னுடைய அழகால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார் என்று சொல்லலாம்.பின்பு அயன்,வீரம்,சுறா,அரண்மனை என அடுத்தடுத்து பல படங்களில் ஸ்டார் ஹீரோக்களுடன் நடித்து உச்ச நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இதையும் படியுங்க: கொலை மிரட்டலால் பயத்தில் பிக் பாஸ் பிரபலம் ..! x -தள பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
இவர் ஜெயிலர் திரைப்படத்தில் “காவலா”பாடலுக்கு டான்ஸ் ஆடி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஸ்த்ரீ 2 படத்தில் “ஆஜ் கிராத்” பாடலுக்கு நடனம் ஆடி,அந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் எந்த படத்தில் நடனம் ஆடுகிறாரோ அந்த படம் நல்ல வசூலை பெறுவதால் அடுத்தடுத்து இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் தமன்னாவை ஆட அழைக்கின்றனர்.
இதனால் கோவம் அடைந்த தமன்னா சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார்,அதில் “நான் ஆடிய பாடல் அந்த படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தால் அது எனக்கு சந்தோசம் தான்,ரஜினி படம் என்பதால் ஜெயிலர் திரைப்படத்தில் ஆடினேன்,ஸ்த்ரீ 2 படத்தின் இயக்குனர் எனது நண்பர் என்பதால் அந்த படத்திலும் ஆடினேன்.அதற்காக நான் ஒன்னும் குத்தாட்ட நடிகை கிடையாது” எனக்குன்னு ஒரு மரியாதை இருக்குது,எல்லோரும் குத்தாட்ட ஆட சொன்னால் எப்படி.? என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்