சினிமாவிற்கு வருவதற்கு முன் நடிகை தமன்னா எப்படி இருக்கிறார் பாருங்க.. துளி கூட மேக்கப் போடாமல் எடுத்த புகைப்படம்..!

Author: Vignesh
26 October 2023, 7:41 pm

2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.

Tamannaah -updatenews360

இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார்.

Tamannaah -updatenews360

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார். கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், OTT India Fest 2023 விழாவுக்கு தமன்னா எப்படி ஒரு உடையில் வந்திருக்கிறார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, சினிமாவிற்கு வருவதற்கு முன் எடுக்கப்பட்ட தமன்னாவின் சில புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Tamannaah -updatenews360
  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!
  • Close menu