தமன்னாவை அதுக்கு மட்டும் யூஸ் பண்ணும் விஜய்.. விளம்பரத்துக்காக இப்படியா..!
Author: Vignesh24 August 2023, 1:45 pm
2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.
இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.
இவர் நடிப்பில் கடைசியாக ஆக்ஷன் திரைப்படம் தமிழில் வெளிவந்தது. இதன்பின் தமிழில் எந்த ஒரு படத்திலும் தமன்னா நடிக்கவில்லை. ஆனால், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தியில் தயாராகிய ஆந்தாலஜி படமாக லஸ்ட் ஸ்டோரி 2 படத்தில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். அதையடுத்து தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் காவாலா பாடல் பாட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதே சமயம், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் இருந்த ரகசிய காதலை தமன்னா சமீபத்தில் வெளிப்படுத்தினார். அதோடு, இருவரும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்தில் படுக்கையறைக் காட்சியில் நடித்து வாய்ப்பிழக்க வைத்தனர்.
இந்நிலையில், தமன்னா நடிப்பில் வெளியாகும் படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு மட்டுமே இருவரும் ஜோடியாக சென்று வருகிறார்கள். அதேபோல தற்போது ஆக்ரி சாக் வெப்தொடர் வெளியாகியுள்ள நிலையில், அதற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் இருவரும் ஜோடி போட்டு சென்றார்கள். பிரமோஷனுக்கு மட்டுமே தமன்னாவை பயன்படுத்துகிறாரே கல்யாணம் பண்ணிப்பாரா என்று கேள்வியும் ரசிகர்கள் கேட்டுவருகின்றார்கள்.
Tamannaah Bhatia and Vijay Varma dazzle Aakhri Sach screening?#tamannahbhatia #vijayvarma pic.twitter.com/6XaQ9uHfWv
— The Filmy Charcha (@thefilmycharcha) August 23, 2023