சாமியார் தோற்றத்தில் தமன்னா – திடீர் மாற்றத்திற்கு அவர் தான் காரணமா..? ஷாக்கான ரசிகர்கள்..!

Author: Vignesh
8 February 2023, 11:30 am

இவர், 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

Tamannaah -updatenews360

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக தமன்னா நடிக்க போவதாக செய்திகள் உலா வருகிறது.

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் தமன்னா, தற்போது சாமியார் வேடத்தில் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், தமன்னா சாமியாராக மாறிவிட்டாரா? என்று அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும், அந்த வீடியோவில் தமன்னா ஈஷாவில் உள்ள லிங்க பைரவி கோவிலின் பெருமைகளை பற்றி தெரிவித்துள்ளார். சமீபகாலமாக ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டிவரும் தமன்னா, படம் ஷூட்டிங் இல்லாத நாட்களில் கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதற்கு முன்பு கூட தமன்னா இமயமலை சென்று ஆன்மிக பயணத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

  • singampuli shared the experience on mayandi kudumbathar movie நான் நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன், ஆனா அவர்தான் என்னைய?- ஓபனாக போட்டுடைத்த சிங்கம்புலி…