தமன்னா எல்லாம் நம்ம குடும்பத்துக்கு செட் ஆகாது : கண்டிஷனால் காதலை தியாகம் செய்த பிரபல நடிகர்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 December 2022, 1:20 pm

சினிமாவில் பல நடிகர் நடிகைகள் பலர் சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒரு சிலர் அந்த பிரச்சனையில் இருந்து வெளியேறிய மீண்டும் தனக்கென ஒரு அடையாளத்தை பிடித்துக் கொள்கின்றர். ஒரு சிலர் அதனால் அப்படியே சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் வெளியேறுகின்றனர்.

அந்த வகையில் தென்னிந்தியாவில் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கிய நடிகைகளில் ஒருவர் தமன்னா. தமன்னா தமிழை தாண்டி இந்தி, மலையாளம், தெலுங்கு என திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றார். இவருக்கு தற்பொழுது 30 வயது ஆனாலும், தன்னுடைய மார்க்கெட் குறையாமல் நடித்துக் கொண்டி ருக்கிறார்.

தமன்னா மீது பல நடிகர்கள் காதலில் விழுந்தனர் என்று கூட சொல்லலாம். அந்த வகையில் தமன்னா மீது காதல் வசப்பட்டு ஒரு நடிகர் அவர் பின்னாலே தொற்றி வந்துள்ளார். அது வேறு யாரும் கிடையாது. த மிழ் சி னிமாவின் வாரிசு நடிகர் கார்த்தி.

இவரது முதல் படமான பருத்திவீரன் திரைப்படத்தில் ஆக்சன் நாயகனாக நடித்தார். பின்னர் காதல், காமெடி என கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார்.
அந்த வகையில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் பையா.

இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி தமன்னாவை ஒரு தலையாக காதல் செய்தார்.

படம் வெளியான பின்பும் கூட, கார்த்தி தமன்னாவை காதலித்து வந்ததாக கிசுகிசக்கள் வெளியாகின. மீண்டும் சிறுத்தை படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தனர். மீண்டும் கிசுகிசு வெளியானது.

இதனால் கடுப்பான சிவக்குமார், உங்க அண்ணன் தான் சினிமாவில் காதல் திருமணம் செய்து கொண்டார். நீயாவது என் பேச்சைக் கேள் என கூறியதால் வீட்டில் பார்த்த ரஞ்சனி என்ற மருத்துவரை மணம்முடித்தார்.

பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் தமன்னாவுடன், கார்த்தி தோழா என்ற படத்தில் இணைந்து நடித்தார். தமன்னா தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு, இந்தி சினிமாவில் நடித்து வருகிறார்.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!