2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.
இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.
இவர் நடிப்பில் கடைசியாக ஆக்ஷன் திரைப்படம் தமிழில் வெளிவந்தது. இதன்பின் தமிழில் எந்த ஒரு படத்திலும் தமன்னா நடிக்கவில்லை. ஆனால், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தியில் தயாராகிய ஆந்தாலஜி படமாக லஸ்ட் ஸ்டோரி 2 படத்தில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். அதையடுத்து தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்து வருகிறார்.
குறிப்பாக ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு தமன்னா போட்ட தமிழ்நாடு முழுக்க பரவலாக பேசப்பட்டது. தற்ப்போது பீக்கில் இருக்கும் நடிகைகள் லிஸ்டில் தமன்னாவும் இடம் பிடித்துவிட்டார். அதற்காகவே அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில்அஜித்தின் விடாமுயற்சி படத்தில் தமன்னாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தியல் தகவல் கிடைத்துள்ளது.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம். முன்னதாக நடிகை திரிஷா இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் ஜெயிலர் படத்தின் ஹைப்பர் காரணமாக இந்த சமயத்தில் தமன்னாவை போட்டால் படம் வேற மாதிரி ஹிட் அடிக்கும் என எண்ணி திரிஷாவை திட்டமிட்டு தூக்கிவிட்டு தமன்னாவை போட்டுள்ளனராம். ஏற்கனவே அஜித் படத்தின் இயக்குனராக ஒப்பந்தமான விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டு மகிழ் திருமனேனியை ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.