காதலரை பிரிந்துவிட்டாரா தமன்னா? திருமணம் குறித்த கேள்விக்கு கடுங்கோபமடைந்த விஜய் வர்மா!

Author: Shree
1 December 2023, 7:30 pm

2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.

இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.

கடைசியாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். நடிகை தமன்னா பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை கடந்த சில வருடங்களாகவே காதலித்து வருகிறார். அவர்களின் அவுட்டிங், ரகசிய லிப்லாக் உள்ளிட்ட புகைப்படங்கள் வெளியாகி அதை உறுதி செய்ய பின்னர் இருவரும் காதலிப்பதாக ஒப்புக்கொண்டனர்.

இப்படியான நேரத்தில் விஜய் வர்மாவிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் தமன்னா உடன் எப்போது திருமணம்? நீங்கள் உண்மையிலே தமன்னாவை திருமணம் செய்துக்கொள்வீர்களா? என கேட்டதற்கு, இந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்லமுடியாது என கோபப்பட்டுள்ளார். இதனால் இருவருக்கும் ஏதேனும் மனக்கசப்பா? அல்லது இருவரும் பிரிந்து விட்டார்களா என மீடியாக்கள் சந்தேகித்து செய்தி வெளியிட்டு வருகிறது. இது தமன்னா ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ