குக்வித் கோமாளி பிரபலத்துக்கு ஜோடியாகும் தமன்னா..- அடடே.. இவர் பெண்களுக்கு மிகவும் பிடிச்சவராச்சே..!

Author: Vignesh
31 May 2023, 12:00 pm

இயக்குனர் சுந்தர் சி பல வெற்றிப்படங்களை கொடுத்து மக்களை கவர்ந்தவர். 2014 -ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

aranmanai - updatenews360

இதனை தொடர்ந்து அரண்மனை இரண்டாம் பாகம் மீண்டும் புதிய கூட்டணியில் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்படத்திற்கு கலவையான விமர்சனமே பெற்றது.

aranmanai - updatenews360

இருப்பினும் அரண்மனை இரண்டாம் பாகம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி பாக்ஸ் ஆபிசில் வெற்றி பெற்றது. இதில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, சூரி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

aranmanai - updatenews360

இதற்கு கிடைத்த வரவேற்பால் சுந்தர் சி ஆர்யாவை வைத்து அரண்மனை மூன்றாம் பாகத்தை உருவாக்கினார். அரண்மனை மூன்றாம் பாகத்திற்கும் கலவையான விமர்சனம் தான் வந்தது.

aranmanai - updatenews360

இந்நிலையில், சுந்தர் சியின் அரண்மனை நான்காம் பாகத்தை இயக்க போவதாகவும், இப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடித்து வருகிறார். இப்படத்தில் முதன் முதலில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதாக இருந்தார். ஆனால், திடீரென அவர் வெளியேற விஜய் சேதுபதி நடிக்கவிருந்த ஹீரோ ரோலில் சுந்தர்.சி நடித்து வருகிறார்.

Tamannaah -updatenews360

இதில் தமன்னா மட்டுமின்றி இப்படத்தில் ராஷி கண்ணாவும் ஹீரோயினாக நடித்து வருகிறார். சுந்தர்.சியின் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Rashi Khanna -updatenews360

ஆனால், தமன்னா யாருக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கிறார் என இதுவரை தெரியாமல் இருந்தது. இந்நிலையில், இப்படத்தில் பிரபல நடிகர் சந்தோஷ் பிரதாப் முக்கிய ரோலில் நடிக்கிறாராம். அவருக்கு ஜோடியாக தான் தமன்னா நடிக்கிறார் என தெரியவந்துள்ளது.

Santhosh-updatenews360

சந்தோஷ் பிரதாப், ஓ மை கடவுளே, சார்பட்டா பரம்பரை, சமீபத்தில் வெளிவந்த கழுவேத்தி மூர்க்கன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 3ல் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். தமன்னா தற்போது ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 446

    1

    1