ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை ரம்பா…ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ்..!

Author: Selvan
9 January 2025, 2:44 pm

COME BACK கொடுக்கும் ரம்பா..!

தமிழ் சினிமாவில் 90-களில் தன்னுடைய அழகான நடிப்பால் பல இளைஞர்களை சுண்டி இழுத்தவர் நடிகை ரம்பா.இவருடைய நடிப்பை தாண்டி இவருடைய கவர்ச்சியான நடனத்துக்கு தனி ரசிகர் பட்டாளம் இன்றளவும் இருக்கிறது.

Rambha new television show

இவர் 1993-ஆம் ஆண்டு வெளிவந்த உழவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.அதன் பின்பு பல படங்களில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி பெற்றாலும்,மிக குறுகிய காலத்தில் சினிமாவில் நடிப்பதை விட்டு விலகினார்.

இவர் அதன்பின்பு சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டார்.அதன் பிறகு சின்னத்திரையில் இருந்து விலகி,தன்னுடைய குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வந்தார்.

இதையும் படியுங்க: வெளிநாட்டில் வியாபாரத்தை தொடங்கிய”இட்லி கடை”…தனுஷ் போட்ட பக்கா பிளானை பாருங்க..!

இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள “ஜோடி ஆர் யூ ரெடி” நடன நிகழ்ச்சியின் புதிய சீசனில் நடுவராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நடன நிகழ்ச்சியின் பழைய சீசனில் சாண்டி,மீனா,ஸ்ரீதேவி நடுவராக இருந்த நிலையில்,தற்போது நடிகை மீனா விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக ரம்பா நடுவராக வர இருக்கிறார் என்ற தகவல் வந்துள்ளது.இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

  • Bharathiraja son Manoj death இறந்த பின்பும் இப்படியா..மனோஜ் சவப்பெட்டி மீது நடந்த மோசமான செயல்..பிரபலம் காட்டம்.!
  • Close menu