இது என்ன புது பிரச்சனையாக இருக்கு..! தனுஷை திசை திருப்புகிறதா வதந்திகள்.?

Author: Rajesh
15 February 2022, 1:56 pm

நடிகர் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா பிரிவதாக சமூகவலைத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டதில் இருந்து, சமூக வலைதளங்களில் இருவரும் பிரிந்ததற்கு பல்வேறு காரணங்கள் பரவி வருகிறது.
இவர்கள் பிரிவு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தாலும், இவர்களை ஒன்று சேர்த்து வைக்கும் முயற்சியில் ரஜினி மற்றும் கஸ்தூரி ராஜா ஈடுபட்டு வருகிறார்கள்.

சில நடிகைகளுடன் தனுஷ் நெருங்கி பழகியதே இவர்களின் விவகாரத்திற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டு வருகிறது. விவாகரத்திற்கு காரணமாக சொல்லப்பட்ட நடிகைளில் ஒருவர் தனுஷிற்கு போன் செய்து விடாமல் துரத்திக்கொண்டு வருகிறாராம். தற்போது தனுஷிற்கு விவகாரத்தானதால் அவருக்கு ஆறுதலாக இருக்கவேண்டும் என்று அந்த நடிகை அடிக்கடி போன் செய்து பேசி வருகிறாராம். ஆனால், தனுஷ் அந்த நடிகை போன் வந்தாலே, இது வேற புது பிரச்சனையாகிவிடும் என்பதற்காக அந்த நடிகையின் போனை தவிர்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் தனுஷ் தற்போது, ஹாலிவுட்டில் முன்னணி இயக்குனரின் படத்தின் நடித்து வருவதன் மூலம் அவரது செல்வாக்கு ஹாலிவுட் வரை சென்றுள்ளது. அவரது புகழை குறைக்கும் விதத்திலேயே, சமூக வலைதளங்களில் அவரைப் பற்றிய வதந்திகள் அதிகளவில் பரபரப்பட்டு வருவதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 1668

    0

    0