ஹீரோக்களை விட அந்த விஷயத்தில் பலே கில்லாடியாக மாறி வரும் வடிவேலு..

Author: Rajesh
18 February 2022, 6:08 pm

தமிழ் சினிமாவில் தன்னுடைய நகைச்சுவை மூலம் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றிருப்பவர் நடிகர் வடிவேலு. ஒரு நகைச்சுவை நடிகராக பல படங்களில் நம்மை கவர்ந்த வடிவேலு தற்போது சினிமாவில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி வெற்றி பெற்றது. அரசியல் பிரச்சினையின் காரணமாக வடிவேலு சில மாதங்கள் எந்த திரைப்படத்திலும் கமிட் ஆகாமல் ஒதுங்கி இருந்தார்.

அவர் படங்களில் நடிக்காமல் இருந்தாலும் அவருக்கு இருந்த ரசிகர் கூட்டம் அப்படியே தான் இருந்தது. மீண்டும் அவர் எப்போது திரைப்படத்தில் நடிப்பார் என்ற அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் திரும்பியுள்ளார். இதையடுத்து வடிவேலுவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடிப்பதற்காக 10 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அடுத்தடுத்த படங்களில் இந்த சம்பளத்தை இன்னும் உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தற்போது உள்ள சூழ்நிலையில் ஹீரோக்கள் பலர் 10கோடி ரூபாய்க்கு குறைவான சம்பளத்தை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் ஹீரோக்களை விட சம்பள விஷயத்தில் பலே கில்லாடியாக வடிவெலு மாறி வருவதாக சினிமா வட்டாரத்தில் கூறி வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ