பத்து தலையால் படக்குழுவிற்கு வந்த பிரச்சனை..! சிம்புவால் விழிபிதுங்கி நிற்கும் தயாரிப்பாளர்.?

Author: Rajesh
16 February 2022, 3:58 pm

மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சினிமாவில் மீண்டும் சிம்புவிற்கு மார்க்கெட் எகிறத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், நடிகர் சிம்பு தற்போது, பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், மேலும், கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை விரைவில் வெளியிட படக்குழு தீவிர பணிகளில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு தற்போது புதிய பிரச்சனை எழுந்துள்ளது. பத்து தல திரைப்படம் ஆரம்பிக்கப்பட்ட போது நடிகர் சிம்பு குண்டாக இருந்தார். கொரோனா பிரச்சினையின் காரணமாக சில மாதங்கள் படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்தன.

அந்த இடைவெளியில் சிம்பு தன்னுடைய தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி விட்டார். அதிகமாக இருந்த தன்னுடைய உடல் எடையை பல உடற்பயிற்சிகளை செய்து அவர் வெகுவாக குறைத்து விட்டார். இதனால் அவர் ஆள் அடையாளம் தெரியாமல் அட்டகாசமாக மாறிவிட்டார் என்று அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த பிரச்சனைதான் பத்துதலை படக்குழுவிற்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. அதாவது சிம்பு குண்டாக இருந்த போது எடுக்கப்பட்ட காட்சிகளை என்ன செய்வது என்று தெரியாமல் படக்குழு முழித்து வருகிறது. இந்நிலையில் பத்து தல படத்தின் தயாரிப்பு நிர்வாகம் இந்த பிரச்சினையை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்ப்போம்..

  • Enai Noki Paayum Thota controversy தனுஷ் இயக்கிய முதல் படம் பா.பாண்டி இல்லையா…உண்மையை உடைத்து பேசிய கெளதம் வாசுதேவ் மேனன்..!