நண்பர் சூரியுடன் பிறந்தநாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன் புகைப்படம் வைரல்..!

Author: Rajesh
17 February 2022, 10:52 am

ஜோக்கராக தொடங்கி தற்போது ஹீரோவாக வலம்வரும் சிவகார்த்திகேயன் இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது சிவகார்த்திகேயன் கைவசம் அயலான், டான், சிங்கப்பாதை போன்ற படங்கள் உள்ளன. மேலும் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதுதவிர தெலுங்கில் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சிவகார்த்திகேயன் நடிக்கும் முதல் தெலுங்கு படம் இதுவாகும். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை நடிக்க உள்ளார்.

நடிகராக மட்டுமின்றி பின்னணி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என முன்னணி பிரபலமாக மின்னி வருகிறார் சிவகார்த்திகேயன்   இவர் எழுதிய அரபிக் குத்து என்கிற பாடல் அண்மையில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி இந்த நாளில் அவரது நண்பர் சூரியுடன் கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!