என்னிடம் ஜாலியாக பேசிக்கொண்டு, நட்பாக இருக்கிறார் என்றால், எனக்கு அதை விட வேறு என்ன வேண்டும் என இயக்குநரும், நடிகருமான ஸ்ரீநாத் கேட்டுள்ளார்.
சென்னை: நடிகரும் இயக்குநருமான ஸ்ரீநாத், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் நெருங்கிய நண்பர் ஆவார். இந்த நிலையில், இவரிடம், சமீபத்தில், விஜய் உடனான உங்களது நட்பு குறித்து பிரபல நாளிதழ் கேள்வி எழுப்பியுள்ளது.
அதற்கு பதில் அளித்துள்ள ஸ்ரீநாத், “நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. நான் ஏற்கனவே ஒரு மேடையில பேசும்போது கூடச் சொன்னேன். ‘அரிது அரிது விஜய்க்கு நண்பனாக பிறப்பது அரிதுன்னு நினைக்கிறேன்’ என்று. எனவே, அது போதும் எனக்கு. அவர் நம்மைக் கவனிப்பாரா?, நம்மிடம் அவர் பேசுவாரா? என்று பல பேர் யோசித்துக் கொண்டு இருக்கும்போது, என்னிடம் ஜாலியாக பேசிக்கொண்டு, நட்பாக இருக்கிறார் என்றால், எனக்கு அதை விட வேறு என்ன வேண்டும்?” எனக் கூறியுள்ளார்.
யார் இந்த ஸ்ரீநாத்? முத்திரை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆகிய படங்களை இயக்கியவர் ஸ்ரீநாத். இவர் தற்போது லெக் பீஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் யோகி பாபு, மணிகண்டன், கருணாகரன், ரமேஷ் திலக், விடிவி கணேஷ், ரவிமரியா மற்றும் மொட்டை ராஜேந்திரன் என பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை ஹீரோ சினிமாஸ் சார்பில் சி.மணிகண்டன் தயாரித்துள்ளார். மேலும், இப்படம் வருகிற மார்ச் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும், இவர் விஜயின் ஆரம்பகால படங்களான நாளைய தீர்ப்பு, மாண்புமிகு மாணவன் ஆகிய படங்களிலும், வேட்டைக்காரன் மற்றும் சமீபத்தில் மாஸ்டர் படத்திலும் விஜயுடன் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: பாக்கியலட்சுமி சீரியலுக்கு END CARD.. வெளியானது புதிய ப்ரோமோ!!
அது மட்டுமல்லாமல், சந்தோஷ், சுப்பிரமணியம், குட்டி, மாசிலாமணி ஆகிய படங்களில் நடிப்பில் கவனம் பெற்றார். அதேநேரம், விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்னும் படத்தில் நடித்து வருகிறார். அரசியலில் நுழைந்துள்ளதால், இதுவே விஜயின் கடைசி படமாக கருதப்படுகிறது.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.