தனுசுடன் மோத ரெடி..வில்லனாக மாறும் பிரபல ஹீரோ… “இட்லிக்கடை” படத்தின் அப்டேட்….

Author: Selvan
27 November 2024, 2:36 pm

தமிழ் சினிமாவில் வில்லன்களாக மாறும் ஹீரோக்கள்


சமீப காலமாக தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் வில்லன்களாக மாறுவது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே 60-70 களில் எம்ஜிஆர், சிவாஜி, நம்பியார், அசோகன், ஆர்எஸ் மனோகரன், ஆர் சுந்தர்ராஜன் போன்ற முன்னணி நடிகர்கள் பெரும்பாலும் வில்லன்களாக நடித்து வந்தனர்.

சில படங்களில் அந்த வில்லன்களே நல்லவராகவும் மாறி ஹீரோக்களின் குணச்சித்திரத்தை காப்பாற்றி விட்டனர். ஆனால் இன்று அந்த காலத்திலிருந்து வேறுபட்டு, பிரபல ஹீரோக்கள் வில்லனாக நடிக்கிறார்கள்.

Arun Vijay villain role in Idli Kadai

சில வில்லன் நடிகர்கள் இப்போது ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர். பிரகாஷ் ராஜ் மற்றும் விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் தற்போது வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்து இரு வகைத் தன்மைகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.

இதையும் படியுங்க: விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிரகாஷ்ராஜ்..வைரலாகும் வீடியோ..குஷியில் ரசிகர்கள்..!

தற்போது, சிவகார்த்திகேயன் நடிக்கும் சுதா கொங்கரா இயக்கியுள்ள படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார்.

தற்போது தனுஷின் இயக்கத்தில் உருவாகும் இட்லி கடை படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்க உள்ளார்.இவர் தற்போது “வணங்கான்” படத்தில் ஹீரோவாக நடிக்கின்றார்.

Tamil actors playing villains and heroes

அருண்விஜய் சம்பளம்

வில்லன் வேடங்களில் நடிப்பதால், நடிகர்கள் அவர்களது சம்பளத்தையும் அதிகரித்துள்ளனர். உதாரணமாக, அருண் விஜய் “இட்லி கடை” படத்தில் வில்லனாக நடிப்பதற்கு ரூ. 8 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவ்வாறு, தமிழ் சினிமாவில் ஹீரோக்களும், வில்லன்களும் ஒரு கேரக்டரில் மாறுவது என்பது மிகவும் வித்தியாசமான அனுபவமாக மாறிவிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே புதிய ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.

  • Kingston movie teaser திகிலூட்டும் ஜி.வி.பிரகாஷின் “கிங்ஸ்டன்”…செம திரில்லரில் வெளிவந்த படத்தின் டீஸர்..!
  • Views: - 175

    0

    0