அய்யோ நான் ஸ்ருதி இல்லை..ஆபாச வீடியோவால் பாலிவுட் நடிகைக்கு சிக்கல்.!

Author: Selvan
29 March 2025, 1:20 pm

பாலிவுட் நடிகை ஷாக்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து வரும் நடிகை ஸ்ருதி நாராயணன் சமீபத்தில் ஒரு ஆபாச வீடியோவில் சிக்கி தவித்து வருகிறார்.

இதையும் படியுங்க: என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!

சமூக வலைத்தளங்களில் இவருடைய அந்தரங்க வீடியோ வேகமாக பரவி வந்தது.இது நடிகை ஸ்ருதி நாராயணனுடையது என்ற வதந்தி பரவியது.இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகிய அவர்,தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்தார்.

இதற்காக,அவர் ஒரு AI வீடியோவை வெளியிட்டார்.அதில் ஒரே தோற்றத்தில் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள்.இதில் யார் உண்மையானவர்,யார் AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டவர் என்பதை காட்டினார்.இதன் மூலம்,இணையத்தில் பரவி வரும் அந்த வீடியோ உண்மையல்ல,AI மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என்பதை அவர் விளக்கினார்.

மேலும்,அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரி ஒன்றில் “எனக்கும்,என் குடும்பத்தினருக்கும் இது மிகுந்த மன அழுத்தம் ஏற்படுகிறது.தயவுசெய்து இந்த வீடியோவை பகிர்வதை நிறுத்துங்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது இந்த சம்பவம் மேலும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம்,பாலிவுட்டில் நடிகை ஸ்ருதி நாராயணன் என்ற ஒருவரும் உள்ளார்.சமந்தா நடித்த “சிடேடல்:ஹனி பன்னி” வெப் தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவரும் தமிழ் நடிகை ஸ்ருதி நாராயணனைப் போலவே காணப்படுவதால்,வட இந்திய ரசிகர்கள் இந்த வீடியோ பாலிவுட் நடிகையின் வீடியோவாக இருக்கலாம் என நினைத்து இந்தி ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியானது.

இதற்குப் பதிலளித்த பாலிவுட் நடிகை ஸ்ருதி நாராயணன்,”இந்தி ஊடகங்கள் தமிழ் நடிகையின் புகைப்படத்துக்கு பதிலாக என்னுடைய புகைப்படத்தை தவறாக பயன்படுத்தியுள்ளனர்.எந்த செய்தியையும் சரிபார்க்காமல் வெளியிடக் கூடாது” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்..

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?
  • Leave a Reply