நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம் அத்துமீறல்…இனி காதலே வேண்டாம்..!

Author: Selvan
14 February 2025, 5:54 pm

காதல் என்ற பெயரில் ஆண் நண்பர் தொல்லை

தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி சினிமாவில் ஹீரோயினாக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதையும் படியுங்க: ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு காதல் தோல்வியா..டாப் நடிகருடன் ஓட்டம் பிடித்த காதலி.!

தற்போது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வருகிறார்.இவர் மாநிறத்தில் இருப்பதால் நமக்கு பழக்கமான ஒரு பெண்மணி போல எப்போதும் இருப்பார்,இவர் காக்கா முட்டை படத்தில் சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து அசத்தியிருப்பார்.

Aishwarya Rajesh Past Love

பக்கா ஹோம்லி நடிகையாக இருக்கும் இவர் கதாபாத்திரத்திற்கு ஏற்ப கவர்ச்சியிலும் நடித்து வருகிறார்.இந்த நிலையில் பலரும் அவரிடம் நீங்கள் யாரையாவது காதல் செய்கிறீர்களா,எப்போது உங்கள் திருமணம் என பல கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

அவர் ஏன் காதல் செய்யாமல் இருக்கிறார் என்ற கேள்விக்கு ஒரு பேட்டியில் விளக்கமாக பதில் அளித்திருப்பார்,அதாவது இவர் சிறு வயதில் அப்பா இறந்ததால் அம்மாவுடன் சேர்ந்து குடும்பத்தை காப்பாற்ற போராடி கொண்டிருந்தார்,அப்போது அவரிடம் ஒரு ஆண் நண்பர் நெருங்கி பழகியுள்ளார்,ஆரம்பத்தில் அந்த ஆண் நண்பர் நல்லவன் போல தன்னை காட்டி,பின்பு அவரை காதல் வலையில் வீழ்த்தி மிகவும் துன்புறுத்தியுள்ளான்,அவனிடம் இருந்து எப்படியோ ஐஸ்வர்யா ராஜேஷை வெளியே வந்தாலும்,அந்த நபர் கொடுத்த வலியால் காதல் மீது பயம் உள்ளது என அந்த பேட்டியில் கூறியிருப்பார்.

  • Lollu Sabha actor Srigo Udhay health update பெரும் சோகம்…பரிதாப நிலையில் லொள்ளு சபா காமெடி நடிகர்..!
  • Leave a Reply