கிசுகிசுக்களால் அந்த நடிகருடன் ஜோடி சேராத நயன்தாரா… வெளியான புதிய தகவல்..!

Author: Rajesh
28 February 2022, 1:29 pm

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. தற்போது, பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகின்றார். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, நயன்தாரா காத்துவாக்குல ரெண்டு காதல், காட் பாதர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார். 15 வருடங்களை கடந்து முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது வரை முன்னணி நடிகரான கமல் ஹாசனுடன் இணைந்து நடிக்கவில்லை. இந்த நிலையில் இதற்கு என்ன காரணம் என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த நடிகை அபிராமி முதல் நடிகை ஆண்ட்ரியா வரை, அவருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளின் பட்டியல் ஏhராளம்.
இதனிடையே பிரபல நடிகைகள் சிலர், நயன்தாராவிடம் தாங்கள் கமல்ஹாசன் கிசுகிசுவில் சிக்கியதால் தான் தங்களுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன எனக் கூறினார்களாம்.

இதனால் தான் நடிகை நயன்தாரா கமலஹாசனுடன் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக இன்று வரை இருக்கிறாராம். இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் இருந்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. நடிகை நயன்தாரா ஏகப்பட்ட கிசுகிசுக்களைத் தாண்டி காதல் வலையில் சிக்கியது பலருக்கு தெரியும் அப்படி இருக்கும்போது நயன்தாரா கமல்ஹாசன் குறை சொல்வது ஏற்புடையது அல்ல என்று பலர் கூறி வருகின்றார்களாம்.

  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!