அந்த படத்தில் மீனாவை ஒதுக்க இது தான் காரணமாம்..? சைலண்டாக வேலையை பார்த்த ரேவதி..!
Author: Vignesh23 May 2023, 3:30 pm
தேவர் மகன் படத்தில் கமல்ஹாசனுடன் முதலில் நடிக்க இருந்தது நடிகை மீனாதான் என்றும் அதன்பிறகு அந்த கேரக்டரில் ரேவதி நடித்தாக தகவல் ஒன்று வெளியாக நிலையில், இது குறித்து நடிகை ரேவதி விளக்கம் அளித்துள்ளார்.
கமல்ஹாசன் நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர், எழுத்தாளர், நடன இயக்குனர் என சினிமாவில் பல துறைகளில் கைதேர்ந்தவராகவும், தமிழ் சினிமாவில் புதிய டெக்னாலஜியை அறிமுகம் செய்த பெருமைக்கு சொந்தக்காரராகவும் திகழ்ந்து வருகிறார். நடிகர் சிவாஜிக்கு பிறகு அவரது இடத்தை நிரப்பும் சரியான நடிகர் என்று கமல்ஹாசன் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.
அதேபோல் நடிகை ரேவதி பாரதிராஜாவின் மண்வாசனை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இவரது மௌனராகம் படம் இவருக்கு ஒரு தனி அடையாளத்தையே கொடுத்தது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்துடன் கை கொடுக்கும் கை, கமல்ஹாசனுடன் கைதியின் டைரி, புன்னகை மன்னன், விஜயகாந்துடன் சத்ரியன் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து அதிர்ஷ்ட நாயகியாக அந்தகாலத்தில் வலம் வந்தார்.
இதனிடையே, ஒரு கைதியின் டைரி படம் கமல்ஹாசனுடன் ரேவதி இணைந்து நடித்த முதல்படம். அதன்பிறகு 1992-ம் ஆண்டு புன்னகை மன்னன் படத்தில் நடித்த இவர், வெளியான தேவர் மகன் படத்தில் கமலுடன் இணைந்து நடித்து இருந்தார். இந்த படத்தில் ரேவதியின் நடிப்புக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்த நிலையில், சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் நடிகை ரேவதி வென்று இருந்தார்.
இந்நிலையில், தேவர் மகன் படத்தில் ரேவதி நடித்திருந்த பஞ்சவர்ணம் கதாபத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகை மீனா என்றும், அவரிடம் இருந்து இந்த வாய்ப்பை ரேவதி பறித்துக்கொண்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, தான் அப்படியெல்லாம் யாருடைய வாய்ப்பையும் தட்டி பறிக்கவில்லை என்றும், தேவர் மகன் வாய்ப்பு தனக்கு தானாக அமைந்தது என்று நடிகை ரேவதி விளக்கம் அளித்து உள்ளார்.
மாலிவுட்டில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தபோது இயக்குனர் பரதன் (தேவர் மகன் இயக்குனர்) தன்னை சந்தித்து மிகவும் அவசரம் நாளை மறுநாள் தன்னை சந்திக்க முடியுமா என்று கேட்டதாகவும், தான் ப்ரியதர்ஷன் சாரிடம் ஒருநாள் லீவு வாங்கிக்கொண்டு சென்றதாகவும், அப்போது டிடிபியில் டைப் செய்த தேவர் மகன் ஸ்கிரிப் பேப்பரை தன்னிடம் கொடுத்ததும் தனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்ததாகவும், அப்போதே அந்த ஸ்கரிப்பை படித்தபோது, கதை கமல்ஹாசன் சார் எழுதியது என்றும், 3 மணி நேரம் படத்தில் தான் கதையோடு ஒன்றிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் பஞ்சவர்ணம் யார் எப்படி இருப்பார் என்பது குறித்து தனக்கு எந்த ஐடியாவும் இல்லை என்றும், அதனால் தான் பரதன் சாரிடம் சென்று கேட்டபோது அவர் இது குறித்து விளக்கம் அளித்ததாகவும், அடுத்த நாளே படப்பிடிப்பு தொடங்கியது என்றும், முதல் சீன் வேப்ப எண்ணெய் தலையில் தடவிய சீன் தான் என்றும், அதன்பிறகு 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது என்று நடிகை ரேவதி தெரிவித்துள்ளார்.