நீங்க ஏன் ஒரு பெண்ணை காதலிக்க கூடாது…அம்மாவை பார்த்து நடிகையின் மகள் கேள்வி..?
Author: Selvan13 February 2025, 9:16 pm
தனிப்பட்ட வாழ்வில் பல சிக்கல்களை சந்தித்து வரும் நடிகை வனிதா
நடிகை வனிதா விஜயகுமாரை பார்த்து,அவரது மகள்கள் நீங்கள் ஏன் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்ய கூடாது என கேள்வி எழுப்பியுள்ளனர்.
பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா தமிழ்,மலையாளம்,தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் நடிகையாக ஜொலிக்கவில்லை.
திரைப்பட வாழ்க்கையில் கோட்டை விட்ட வனிதா,தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சறுக்கல்களை சந்தித்து வந்தார்,இவர் 2000 ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷை திருமணம் செய்தார்,இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்,பின்னர் 2007ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து அதே ஆண்டில் தொழிலதிபர் ஆனந்த் ஜெயராஜை மணந்தார்,இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில் 2012ஆண்டு இவர்களும் பிரிந்தனர்.
அதன் பிறகு பிக் பாஸ் சீசன் 3-யில் பங்கு பெற்று பரவலாக பிரபலம் ஆனார்.தனது குடும்பத்துடன் ஒதுங்கி தனியாக வாழ்ந்து வந்த வனிதா 2020 ஆம் ஆண்டு திரைபட ஆசிரியர் பீட்டர் பாலுவை மூன்றாவதாக திருமணம் செய்தார்,பின்பு அவருடணும் விவாகரத்து வாங்கி பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது குழந்தையான ஜோவிகா விஜயகுமார் நீங்கள் ஏன் ஒரு பெண்ணை காதலிக்க கூடாது என கேட்டதாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்,தற்போது உள்ள காலகட்டத்தில் ஆணும் ஆணும்,பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து சந்தோசமாக இருக்கும் நிலையில்,தனது அம்மாவை பார்த்து ஜோவிகா விஜயகுமார் நீங்களும் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
வனிதா விஜயகுமார் தற்போது நடன இயக்குனர் ராபர்ட் உடன் Mrs & Mr என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.