விஜய் டிவியில் இருந்து தாவிய பிக் பாஸ் தமிழ் : வேறு சேனலுக்கு மாற்றம்!
Author: Udayachandran RadhaKrishnan20 February 2025, 11:52 am
விஜய் டிவியில் கடந்த 8 வருடமாக வெற்றிகரமாக ஓடிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்தியில் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மெல்ல மெல்ல தமிழுக்கும் வந்தது.
முதல் சீசன் முதல் தற்போது நடந்த 8வது சீசன் வரை இந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் ஏராளம். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இதையும் படியுங்க : பாக்கியலட்சுமி சீரியலுக்கு END CARD.. வெளியானது புதிய ப்ரோமோ!!
கடந்த மாதம் நடந்து முடிந்த தமிழ் பிக் பாஸ் 8வது சீசனில் முத்துக்குமரன் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டி சென்றார். சிலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தற்போது கலர்ஸ் சேனலில் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது
பிக்பாஸ் 8வது சீசனி மறுஒளிபரப்பு வரும் பிப்ரவரி 23ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாக உள்ளதாக ப்ரோமோ வெளியாகி உள்ளது.