இது துபாயா இல்ல…கோடம்பாக்கமா…அஜித் கார் ரேஷை பார்க்க போன திரைப்பிரபலங்கள்..!

Author: Selvan
13 January 2025, 2:55 pm

சினிமா பிரபலங்களின் நேரடி ஆதரவு

நடிகர் அஜித்குமார் தன்னுடைய அணியுடன் துபாய் 24Hகார் ரேஸில் கலந்து கொண்டார்.

அஜித் நீண்ட வருடத்திற்கு பிறகு கார் ரேஸில் ஈடுபட்டதால் அவருக்கு பலரும் தங்களுடைய ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்த நிலையில் பல சினிமா பிரபலங்கள் நேரில் சென்று தங்களுடைய ஆதரவை தெரிவித்து உற்சாகமாக ரேசை கண்டுகளித்தனர்.

Ajith Kumar Dubai car race victory

அந்த வகையில் நேற்று முடிந்த போட்டியின் முடிவில் அஜித் அணி மூன்றாம் இடம் பிடித்து வெற்றி வாகை சூடியது.வெற்றிக்கு பின் அஜித் தனது அணியுடன் உற்சாகமாக இந்தியாவின் தேசிய கொடியை கையில் ஏந்தி துள்ளி குதித்து கொண்டாடினார்.

அப்போது அங்கிருந்த சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.அந்த வகையில் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடித்துள்ள ஆரவ்,நடிகர் அர்ஜுன் தாஸ்,அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்,அஜித்தின் நெருங்கிய நண்பர் மற்றும் பிரபல நடிகரான மாதவன்,அஜித்தின் பில்லா பட இயக்குனர் விஷ்ணு வர்தன் என பல நட்சத்திரங்கள் அஜித்தின் துபாய் கார் ரேசை நேரில் சென்று கண்டுகளித்தனர்.

இதையும் படியுங்க: படம் ஓடுனாலே பொறாமை படுறாங்க… ஆதங்கத்தை வெளிப்படுத்திய கௌதம் மேனன்…!

அதுமட்டுமல்லாமல் ஏகப்பட்ட தமிழ் ரசிகர்கள் நெருங்கிய உறவினர்கள் என பலரும் அஜித்தின் கார் ரேசை காண குவிந்தனர்.அஜித்தின் இந்த மெகா வெற்றி மூலம் அவருக்கு தற்போது வரை பல சினிமா பிரபலங்கள்,அரசியல்வாதிகள் தங்களுடைய வாழ்த்துக்களை சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த்,கமல் ஹாசன்,சிம்ரன்,யுவன் ஷங்கர் ராஜா,ஹரிஷ் கல்யாண்,சிவகார்த்திகேயன்,இயக்குனர் சிவா,வெங்கட் பிரபு,உதயநிதி,எடப்பாடி பழனிசாமி,மு க ஸ்டாலின்,அண்ணாமலை என பலரும் அஜித்தின் வெற்றியை நம்முடைய இந்திய நாட்டுடைய வெற்றியாக கருதி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

  • Prabhas marriage updates கல்யாணத்துக்கு OK சொன்ன நடிகர் பிரபாஸ் ….ரகசியத்தை போட்டுடைத்த ராம் சரண்…பொண்ணு எந்த ஊரு தெரியுமா..!
  • Leave a Reply