பிரபல நடிகர் வீட்டில் திடீர் சோகம்…துயரத்தில் குடும்பம்…ஆறுதலில் இறங்கிய திரைபிரபலங்கள்.!

Author: Selvan
6 February 2025, 7:57 pm

காளி வெங்கட் வீட்டில் நடந்த துயரம்

தமிழ் சினிமாவில் எப்படியாவது பெரிய ஆளாக வரவேண்டும் என பல கனவுகளோடு தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இருந்து சென்னைக்கு சென்றவர் தான் நடிகர் காளி வெங்கட்.

இதையும் படியுங்க: ‘விடாமுயற்சி’ முதல் நாளே அனிருத்துக்கு வந்த தலைவலி..தியேட்டர் வாசலில் காத்திருந்த அதிர்ச்சி..!

ஆரம்பத்தில் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காததால் கிடைக்கின்ற வேலைகளையெல்லாம் செய்து தன்னுடைய கனவான சினிமா வாய்ப்பை தேடி மூலை முடுக்கெல்லாம் அலைந்தார். அப்போதுதான் இயக்குனர் விஜய் பிரபாகரனின் அறிமுகம் கிடைத்து ‘தசையனை தீ சுடினும்’ படத்தில் காளி என்ற ரோலில் அறிமுகம் ஆனார்,அதன் பிறகு முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த அவர்,அடுத்தடுத்து பல படங்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

Kaali Venkat mother funeral updates

கரியரின் உச்சத்தில் தற்போது இருக்கும் போது திடீரென அவரது குடும்பத்தில் ஒரு சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது அவரது தாயாரான விஜயலட்சுமி உடல்நலக்குறைவு காரணமாக 72 வயதில் உயிரிழந்துள்ளார்.இதனால் காளி வெங்கட்டின் குடும்பம் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளது.அவரது அம்மாவின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலர் காளி வெங்கட்டின் வீட்டிற்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

  • Sarathkumar and Devayani in 3BHK after 30 years 30 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானியுடன் சரத்குமார்…வைரலாகும் படத்தின் டீசர்..!
  • Leave a Reply