மளமளவென அதிகரித்த மாதவனின் முழு சொத்து மதிப்பு..-கேட்டதும் தல கிர்ர்ர்ன்னு சுத்துது..!
Author: Vignesh1 June 2023, 2:00 pm
90ஸ் காலத்தில் முன்னனி நடிகராக இருந்தவர் மாதவன். இவர் இவர் 2000ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கிய மின்னலே என்ற திரைப்படத்திலும் மற்றும் டும் டும் டும் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து கன்னத்தில் முத்தமிட்டால் , ரன் , அன்பே சிவம் , ஆய்த எழுத்து, இறுதிச்சுற்று , விக்ரம் வேதா போன்ற பல தமிழ் திரைப்படங்களிலும் மற்றும் இந்தியில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் மாதவன் முதலில் நடித்த அலைபாயுதே திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்ததால் அடுத்தது என்னவளே படத்தில் நடித்திருந்தார். அலைபாயுதே ஹிட் ஆன உடனே அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து தயாரிப்பாளர்கள் மாதவனை புக் செய்தார்கள்.
மேலும், பாலிவுட்டில் சீரியல்களில் நடித்துவந்த மாதவனுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது தான் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மூலம் தமிழக மக்களால் சாக்லெட் பாயாக கொண்டாடப்பட்ட மாதவன் கன்னத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், ஜேஜே, ஆயுத எழுத்து, இறுதிசுற்று போன்ற படங்களில் நடித்து வெற்றிகளை கண்டார்.
இதனிடையே, 25 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நடிகராக வலம் வரும் மாதவனின் சொத்து மதிப்பு ரூ. 105 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மும்பையில் ஆடம்பர பங்களா, சென்னையில் ரூ. 18 கோடி மதிப்பில் ஒரு வீடு இருக்கிறது. மேலும், மாதவன் ஒரு படத்துக்கு ரூ. 6 முதல் ரூ. 8 கோடி வரை சம்பளம் பெறுவதாகவும், விளம்பரங்கள் மூலமாகவே ரூ. 1 கோடி வரை வருவாய் பெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.