சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத நடிகர்களில் ஒருவராக மாறியவர், பிரபல தயாரிப்பாளரான G.K. ரெட்டி அவர்களின் மகனான விஷால்.
நடிகர் சங்கத்தில் தற்போது முக்கிய பதவி வகித்து வரும் விஷால், சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி என்னும் தயாரிப்பு கம்பெனியும் நடத்தி வருகிறார். அவன் இவன், மருது, துப்பறிவாளன் போன்ற திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.
தற்போது இவர் நடிப்பில் லத்தி படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. நடிகர் விஷாலுக்கு 40 வயது கடந்த போதிலும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
நடிகர் சங்கத்தில் போட்டியிடுகைகள் நடிகர் சங்கத்திற்கான பிரம்மாண்ட கட்டிடத்தை கட்டி எழுப்பிய பிறகே, தான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக விஷால் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இரண்டு முறை வெற்றி பெற்ற பிறகும் கட்டிடம் முழுமை அடையவில்லை. இதற்கிடையே கடந்த 2019ம் ஆண்டு அனுஷா ரெட்டி என்பவர் உடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் இந்த திருமணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று 11 ஜோடிகளுக்கு விஷால் திருமணம் செய்து வைத்துள்ளார். சுமார் 51 பொருட்கள் அடங்கிய குடும்பத்திற்கு மிகவும் தேவையான சீர்வரிசை பொருட்களுடன் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. விஷால் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த திருமணம் மாத்தூர் பகுதியில் நடைபெற்றது.
மந்திரங்கள் முழங்க 11 ஜோடிகளுக்கு கட்டப்பட உள்ள மாங்கல்யத்தை கொடுத்ததும், இந்து, கிறிஸ்டியன், மற்றும் முஸீம் என மூன்று மத வழக்கப்படியும் வழிபாடு செய்து திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விஷால் பல மாதங்களுக்கு முன்னரே திருமணம் முடிந்து விட்ட பழைய ஜோடிக்கு தற்போது இலவச திருமணம் செய்து வைத்துள்ளார் என்கிற விமர்சனம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலமாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்”…
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
This website uses cookies.