மேடை நிகழ்ச்சிகள், டிராமா போன்றவற்றில் பங்கேற்று தனது கலை துறையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ஆண்ட்ரியா. நடிகை, பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பல திறமைகளை கொண்டுள்ளார். விளம்பர படங்களில் நடித்து வந்த ஆண்ட்ரியா, கண்ட நாள் முதல் என்னும் திரைப்படத்தில் சாதாரண கூட்டத்தில் ஒரு பெண்ணாக நடித்திருந்தார். பின்னர், பச்சைக்கிளி முத்துச்சரம் என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனைத் தொடர்ந்து, மங்காத்தா, சகுனி, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, அரண்மனை, உத்தம வில்லன், தரமணி, விஸ்வரூபம் 2 போன்ற திரைப்படங்களில் நடித்தார். முக்கியமாக, வடசென்னை திரைப்படத்தில் இவரது சந்திரா கதாபாத்திரம் செம வைரல் ஆனது.
ஒரு போல்ட் கதாபாத்திரத்தில் நடித்த இவர், தொடர்ந்து, மாஸ்டர், அரன்மனை 3, வட்டம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். மேலும், வேட்டையாடு விளையாடு, ஆடுகளம், நண்பன, தங்கமகன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியிருந்தார். தற்போது, மாளிகை, பிசாசு 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ஆண்ட்ரியா “அனல் மேல் பனித்துளி” என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தான் ஒரு பிரபல செய்தி சேனலின் நேர்காணலில் “அனல் மேல் பனித்துளி” படத்தில் நடித்தது பற்றியும் அவரது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் ஒன்று பற்றியும் சொல்லியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் இயக்குனர் கைசர் ஆனந்த் இயக்குகிறார். ஆண்ட்ரியா மற்றும் ஆதவ் கண்ணதாசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்பாடமானது ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் ப்ரோமஷனுக்கான நேர்காணலின் போது இப்படத்தின் நடிகையான ஆண்ட்ரியா பேசிய போது ”இப்படத்தில் நடிக்கும் சில காட்சிகளில் எனக்கு மட்டுமில்லை படத்தில் நடிக்கும் அனைவருக்குமே அதிர்ச்சிகரமாக இருந்தது. நாங்கள் திரைப்படத்தில் நடிப்பதே இவ்வளவு கடினமாக இருக்கிறதே ஆனால் இந்த விஷயம் உண்மையாகவே வெளியுலகில் நடப்பதை நினைத்தால் வயிறே கலங்குகிறது என்று கூறினார்.
படத்தை பற்றி பேசிக்கொண்டே தனக்கு நடந்ததை பற்றியும் கூறினார். அதில் நான் சிறுவயதாக இருக்கும் போது தன்னை ஆபாசமாக தீண்டியது நடந்திருக்கிறது. உதாரணமாக பைக்கில் வந்து பின்னாடி தட்டிவிட்டு செல்வார்கள் ஆனால் அதை நாங்கள் சகஜம் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அது தவறு அப்படி இருப்பதனால்தான் இன்று சில சொல்லவே கூசும் நிகழ்வுகள் எல்லாம் பெண்களுக்கு சமுதாயத்தில் நடந்து வருகிறது என்றும் தன்னுடைய ஆதங்கத்தை கூறியிருந்தார்.
மேலும் சிறு வயதில் தனக்கு நடந்த மோசமான அனுபவம் ஒன்றையும் கூறி இருக்கிறார் ஆண்ட்ரியா. எனக்கு 11 வயது இருக்கும்போது நாங்கள் பேருந்தில் வேளாங்கண்ணிக்கு சென்று கொண்டிருந்தோம் .அப்போது திடீரென்று எனக்கு பின்னால் யாரோ கை வைப்பது போல இருந்தது. அதை முதலில் என்னுடைய தந்தையின் கை என்று நினைத்தேன். ஆனால், திடீரென்று என் டீ ஷர்ட்டுக்குள் அந்த கை நுழைந்தது. நான் என்னுடைய தந்தையின் கைதான் என்று ஆனால் என் தந்தை கை என் கண் முன்னாடி தான் இருக்கிறது. இதைப் பற்றி நான் என்னுடைய அம்மா அப்பா இருவரிடமும் சொல்லவில்லை.
நானே கொஞ்சம் முன்னாள் சென்று அமர்ந்து கொண்டேன். இதை நான் ஏன் என்னுடைய பெற்றோர்களிடம் சொல்லவில்லை என்று தெரியவில்லை. என் அப்பாவிடம் சொல்லி இருந்தார் அவர் கண்டிப்பாக ஏதாவது செய்திருப்பார். ஆனாலும், இது போன்ற விஷயமெல்லாம் நடந்தால் வெளியில் சொல்லக்கூடாது என்று தான் நம்முடைய சமூகம் நம்மை வளர்த்து இருக்கிறது என கூறினார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.