2025-ல் கோலிவுட்டை கலக்க போகும் இளம் நடிகைகள்…பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
Author: Selvan1 January 2025, 2:21 pm
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் புது புது நடிகைகள் வருகை தந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.போன வருடம் மஞ்சு வாரியார்,ரித்திகா சிங்,துஷாரா விஜயன் என பல நடிகைகள் தங்களுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தனர்.
அந்த வகையில் இந்த வருடத்தில் பல இளம் நடிகைகள் பெரிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.
இதையும் படியுங்க: பாட்ஷா ஸ்டைலில் புத்தாண்டு வாழ்த்து: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு..!
பூஜா ஹெக்டே
அந்த வரிசையில் விஜயின் பீஸ்ட்படத்தில் நடித்த பூஜா ஹெக்டே அடுத்த வருடம் முக்கியமான படங்களில் நடித்து வருகிறார்.விஜயின் தளபதி 69,சூர்யாவின் ரெட்ரோ படத்தில் நடித்து வருகிறார்.இதனால் இவருடைய நடிப்பை காண ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.
கியாரா அத்வானி
அடுத்ததாக பொங்கலுக்கு சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள கேம் சேஞ்சர் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.இப்படத்தில் நடித்துள்ள கியாரா அத்வானியின் நடிப்பை மட்டுமல்லாமல்,படத்தின் பாடல் காட்சிகளை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
ருக்மணி வசந்த்
கன்னடத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு படையெடுத்துள்ள ருக்மணி வசந்த் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் SK 23 படத்தில் நடித்து வருகிறார்,மேலும் இவர் விஜய் சேதுபதியின் ஏஸ் படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கயாடு லோஹர்
அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் ட்ராகன் படத்தில் அனுபமா பரமேஸ்வரனுடன் சேர்ந்து நடிக்கும் கயாடு லோஹர் தன்னுடைய நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை கவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.