அந்த நடிகருடனான படுக்கை அறை காட்சி.. கடுப்பான மாளவிகா மோகனன்..!
Author: Vignesh18 August 2023, 3:15 pm
பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.
இதனை தொடர்ந்து, தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். இந்த நிலையில், அவ்வப்போது மாலத்தீவில் இருந்த படு கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூட்டைக் கிளப்பி வந்தார். தற்போது, பா ரஞ்சித், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது, அப்போது ரசிகர்கள் பல விதமான கேள்விகளை எழுப்பினர். அதில், ரசிகர் ஒருவர் மாறன் படத்தில் தனுசு உடனான படுக்கையறை காட்சி எத்தனை முறை படமாக்கப்பட்டது என்று கேள்வியை கேட்டு இருந்தார். இதற்கு கடுப்பான மாளவிகா மோகனன் உங்கள் மண்டைக்குள் மோசமான எண்ணம் உடைய இடம் இருக்கிறது என காட்டமாக பதில் அளித்துள்ளார்.