எனக்கே டேக்கா கொடுக்குறியா? ஆசைக்கு அடங்காத அடக்கமான நடிகை- தட்டி தூக்கிய அசுரன்!
Author: Shree2 August 2023, 12:05 pm
பெங்களூரில் இருந்து நடிக்க வந்தாலும் கவர்ச்சி எதுவுமே காட்டாமல் அடக்கமாக நடித்து வருகிறார் அந்த அழகிய நடிகை. கன்னடத்தில் ஒரு படம், தெலுங்கில் ஒரு படம் என தலைகாட்டிவிட்டு அதன் பின்னர் தமிழுக்கு வந்தார். இங்கு வந்த வேகத்திலே ஒரு மாபெரும் பிளாக் பஸ்டர் ஹிட் படத்தில் நடித்து யார்? யார்? இந்த பொண்ணு என எல்லோரையும் கேட்கவைத்துவிட்டார்.
ஒரே படத்திலே ஒட்டுமொத்த ரசிகர்களை வசீகரித்த அம்மணியை இயக்குனர்கள் விடுவார்களா என்ன? என் படத்தில் நடிங்க சம்பளம் கூட போட்டுத்தறேன் என இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் லைனில் காத்திருந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் செய்தார்கள். டாப் ஹீரோக்களுக்கு அடுத்தப்படுத்து ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக இடம் பிடித்துவிட்டார் எதற்கும் துணிந்த அந்த நடிகை.
தற்போது ஹாலிவுட் ரேஞ்சுக்கு அசுர நடிகரை வைத்து படமெடுத்துவரும் மாசான ஒரு படத்தில் சுள்ளானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சுள்ளான் நடிகர் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை பதம் பார்க்காமல் விடவே மாட்டார் என தொடர்ந்து செய்திகளாக வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த நடிகையை வளைக்க பார்த்தாராம்.
ஆனால், அதற்கு அவர் சிக்காமல் ஓட்டம் பிடிக்க பின்னர் திட்டம் போட்டு ஒரு நாள் அவுட்டோரில் ஷூட்டிங்கை வைத்துள்ளார் சுள்ளான். அப்போது மதுபோதையில் நடிகையின் அறைக்கு செல்ல அவர் கத்தி கூச்சல் போட்டு ஊரை கூட்டி எஸ்கேப் ஆனாராம். இதனால் கடுப்பான சுள்ளான் எனக்கே டேக்கா கொடுக்கிறியா? இது தான் உன் லாஸ்ட் படம் என எச்சரித்துவிட்டு அந்த நடிகைக்கு வரும் வாய்ப்புகளை தட்டித்தூக்கி பதறவைத்து வருகிறாரராம்.