ஜெயிலர் 2-வில் சிவராஜ்குமாருக்கு பதில் இவரா…ஸ்கெட்ச் போட்டு தூக்கிய நெல்சன்..!
Author: Selvan21 January 2025, 7:32 pm
ஜெயிலர் 2 அப்டேட்
தமிழ் சினிமாவில் வளர்த்து வரும் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் நெல்சன்.இவர் ஆரம்ப கால கட்டத்தில் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை இயக்கி வந்து பின்பு வேட்டை மன்னன் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குனராக அறிமுகம் ஆனார்,ஆனால் அப்படம் பாதியில் கைவிடப்பட்டது.
இதையும் படியுங்க: பாதாளத்தில் உள்ள தனது கனவு படத்தை தோண்ட முடிவு…சுந்தர் சி போடும் பக்கா பிளான்…!
அதன் பிறகு யோகிபாபுவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கி வெற்றி கொடுத்த பிறகு டாக்டர்,பீஸ்ட் என அடுத்ததுது வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை ருசித்த பிறகு,தற்போது ஜெயிலர்2-வை கையில் எடுத்துள்ளார்.
இதனுடைய முதல் பாகத்தில் ரஜினியுடன் மோகன்லால்,சிவராஜ்குமார்,ஜாக்கி ஷ்ராப் போன்றோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து மிரட்டி இருப்பார்கள்.இந்த நிலையில் தற்போது சிவராஜ் குமார் புற்றுநோய் சிகிச்சையில் இருந்து மீண்டு வந்து ஓய்வில் இருப்பதால்,அவருக்கு பதிலாக தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் ரசிகர்கள் ஜெயிலர் 2-வில் ரஜினியோடு வேற யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்ற அதிகாரபூர்வ தகவல்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.