அந்த சீன்’ல கவுண்டமணி வடிவேலுவை நிஜமாவே மிதிச்சாரு.. அப்போவே வடிவேலு கதைய முடிச்சிருப்பேன்: பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி..!

Author: Rajesh
5 March 2023, 3:00 pm

தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில்க்கு அடுத்தபடியாக காமெடி நடிகராக மிக பிரபலமாக திகழ்ந்து வந்தவர் நடிகர் வடிவேலு. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். சில வருடங்களுக்கு முன், எதிர்பாராத விதமாக, 24 ஆம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால், சினிமாவில் நடிக்க தடை விதித்து இவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.

Vadivelu_Updatenews360

சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற வடிவேலு, தான் சினிமாவில் நடிக்காமல் இருப்பது பெரும் வலியையும் வேதனையையும் கொடுப்பதாக கூறி கலங்கி வந்தார். பின்னர், தடையை நீக்கியதற்கு பின், மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து, படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில், இவர் கதாநாயகனாக நடித்து வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகி சுமாரான விமர்சனத்தை பெற்றது. சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக, நடிகர் வடிவேலு குறித்து சக நடிகர் நடிகைகள் நெகட்டிவான கருத்துக்களை தங்களது பேட்டிகளில் கூறி வருகின்றனர். அந்த வகையில், நகைச்சுவை நடிகரான சிசர் மனோகர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், நடிகர் வடிவேலு குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார். தான் ராஜ்கிரண் புரடெக்ஷன்ஸ் நிறுவனத்தில்தான் ஆரம்பத்தில் வேலை பார்த்ததாகவும், அங்குதான் ராசாவின் மனசிலே படத்தின் ஷூட்டிங்கின் போது வடிவேலு வேலைக்கு சேர்ந்தார்.

அந்த படத்தில் கடைசியாக காமெடி ட்ராக் எடுத்துபோது ஒரு காட்சியில் வடிவேலுவை நடிக்க வைத்தார்கள். ஆனால் அது கவுண்டமணி சாருக்கு பிடிக்கவில்லை. ராஜ்கிரணை அழைத்து சத்தம்போட்டார். பின்னர் ராஜ்கிரண் ஒரே ஒரு காட்சிதான் அண்ணே, அனுப்பிடலாம் என சமாதானப்படுத்தினார். பின்னர் அதில் வடிவேலுவை கவுண்டமணி மிதிப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டது.

இதில் கவுண்டமணி சார் கடுப்பில் வடிவேலுவை நிஜமாகவே மிதித்தார். இதை சொல்லி வருத்தப்பட்டார் வடிவேலு. ஆரம்பக் காலத்தில் வடிவேலுவுக்கு நான் பல உதவிகளை செய்திருக்கிறேன். ஆனால் அந்த உதவிகளை எல்லாம் வடிவேலு மறந்துவிட்டார் என சிசர் மனோகர் கூறி வருந்தியுள்ளார். தனக்கு வந்த வாய்ப்புகளை தட்டிப்பறித்து அவருக்கு வேண்டியவர்களுக்கு கொடுத்தார் என்றும் கூறியுள்ளார்.

பகவதி படத்தில் தான் நடிக்க வேண்டியதை கெடுத்தது வடிவேலுதான் என்றும், எனக்கு மட்டும் மூன்று பெண் பிள்ளைகள் இல்லாமல் இருந்திருந்தால் அன்றே அவரது கதையை முடித்திருப்பேன் என்றும் ஆவேசமாக கூறியுள்ளார். சீமான் தான் தன்னை அழைத்து சமாதானப்படுத்தியதாகவும், ஏன் தனக்கு வந்த சினிமா வாய்ப்புகளை வடிவேல் தட்டிப்பறித்தார் என்று தனக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

scissor manohar_Updatenews360

23ம் புலிகேசி படத்தில் சிம்பு தேவன் சார்தான் தன்னை இளவரசன் கதாப்பாத்திரத்தில் நடிக்க அழைத்ததாகவும் கூறியுள்ளார். அதில் தன்னுடைய 11 காட்சிகளை 3 காட்சிகளாக குறைத்தது வடிவேலுதான். அந்தப் படம் இயக்குநர் சொன்னது போல் வந்திருந்தால், தன்னுடைய வாழ்க்கை மாறியிருக்கும் என்றும் ஆதங்கப்பட்டுள்ளார் சிசர் மனோகர். வடிவேலு மீது அடுத்தடுத்து பிரபல நடிகர் – நடிகைகள் குற்றச்சாட்டுக்களை முன் வைப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 776

    1

    0