பாடகியுடன் தனி ரூமில் கச்சேரி.. படத்தை விட அந்த விஷயத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்..!

Author: Vignesh
23 August 2023, 4:30 pm

தமிழ் திரையுலகில் தற்போது அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைத்து வரும் ஒரே இசையமைப்பாளர் அனிருத். ரஜினி நடிப்பில் உருவாகும் ஜெயிலர், விஜய் நடிப்பில் உருவாகும் லியோ, கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 , ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ளாள் ஜவான் என பிரபலங்களின் திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக புக் ஆகி படு பிசியாக இருந்து வருகிறார்.

தனுஷின் 3 படத்தின் மூலம் அறிமுகமான இவர், முதல் படம் முதலே மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து, திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டார். தற்போது தென்னிந்திய திரையுலகில் தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்துள்ள அனிருத் கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டில் அடிக்கல் நாட்ட உள்ளார்.

தொடர்ந்து இடைவெளி இல்லாமல் பல ஹீரோக்களுக்கு மாசான வெற்றி கொடுத்து வரும் அனிருத் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமானை விட அதிக சம்பளம் வாங்குகிறாராம். ஆம், ஏ ஆர் ரகுமான் ஒரு படத்திற்கு ரூ. 8 கோடி சம்பளம் வாங்குகிறார். ஆனால், அனிருத் ஜவான் படத்திற்கு இசையமைக்க ரூ. 10 கோடி சம்பளம் வாங்கியிருப்பது திரையுலகினரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

anirudh ravichander - updatenews360-1

மேலும், அனிருத் ஒரு படத்திற்கு இசையமைக்க நாலு கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம். இந்நிலையில், படத்தை விட பாட்டு கச்சேரி நிகழ்ச்சிகளுக்கு ரூபாய் 5 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார். ஒரே ஒரு நாள் பாட்டு கச்சேரிக்கு 5 கோடி சம்பளமா என இதை கேள்விப்பட்ட பிரபலங்கள் வாய்யடைத்து போய்விட்டார்களாம்.

வெளிநாட்டில் கச்சேரிக்கு சென்றால், கூடவே வடநாட்டு பாடகி ஒருவரை அழைத்து செல்கிறாராம். ஸ்டேஜில் கச்சேரி முடிந்ததும் ரூமில் இவர்கள் கச்சேரி தொடங்கி விடுவதாக தற்போது கோலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!