என்னப்பா அடுத்த சூரியவம்சமா?.. 27 வருடங்களுக்கு பின் இணைந்த சரத்குமார் – தேவயானி..!

Author: Vignesh
15 July 2024, 9:12 am

தமிழ் சினிமாவில் எட்டு தோட்டாக்கள் படத்தின் மூலமாக கவனம் ஈர்த்த ஸ்ரீகணேஷ் அந்த படத்திற்கு பிறகு ஐந்தாண்டு கழித்து இயக்கிய திரைப்படம் குருதியாட்டம். இந்த படத்தில், அதர்வா மற்றும் பிரியா பவானிசாகர் ஆகியோர் நடித்துள்ளனர். ஆனால், எதிர்பார்த்த அளவு வெற்றியை இந்த படத்திற்கு கிடைக்கவில்லை.

மேலும் படிக்க: சொகுசு கப்பலில் திருமணம்.. மகன் திருமணத்திற்காக ‘அந்த’ விஷயத்தை செய்யும் நெப்போலியன்..!

இதனால், அவரின் அடுத்த படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, மாவீரன் படத்தை தயாரித்த அவர் சாந்தி டாக்கீஸ் தயாரிக்கும் சித்தார்த்தின் 40வது படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கியுள்ள நிலையில், இந்த படத்தில் சரத்குமார், தேவயானி 27 வருடங்களுக்கு பின்னர் இணைந்துள்ளனர்.

மேலும், நீதா ரகுநாத் மற்றும் சைத்ரா அச்சார் ஆகியோரும் இணைந்துள்ளனர். இந்த படத்தின் மற்றொரு தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 135

    0

    0