சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் இடையே காதல் ஏற்படுவது அன்றைய காலம் முதல் வாடிக்கையான விஷயம் தான். எத்தனையோ கலைஞர்கள் நடிக்கும் போது காதல் ஏற்பட்டு திருமணம் வரை சென்றதும் உண்டு. சிலர் திருமணம் செய்யாமல் பிரிந்ததும் உண்டு.
நடிகர்கள் ராதிகா மற்றும் விஜயகாந்தின் திருமணம் ஏன் நின்று போனது என்பது பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் புகழ்பெற்று விளங்கிய பல நடிகர் நடிகைகள் நிஜ வாழ்விலும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதே போல பல நடிகர், நடிகைகளின் காதல் திருமணம் வரை சென்றதில்லை. அப்படி ஒரு காதல் ஜோடியாக விஜயகாந்தும் ராதிகாவும் காதலித்து அது திருமணம் வரை சென்றும் அவர்கள் திருமணம் நடக்கவில்லை. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
அந்த வகையில், உடன் நடிக்கும் நடிகையுடன் காதல் வயப்பட்ட நடிகர்களில் பிரபலமானவர் நடிகர் விஜயகாந்த். ஆரம்பத்தில் கிராமத்து நாயகனாக வலம் வந்த விஜயகாந்த். பின்னர் ஆக்ஷனில் களமிறங்கி ரஜினி, கமல் படங்களுக்கு பெரிய டஃப் கொடுத்தார்.
கிராமத்து கதாநாயகான வலம் வந்த விஜயகாந்த்தின் சினிமா ரூட்டையே மாற்றியவர் நடிகை ராதிகா. இருவரும் ஒருவருக்கொருவர் அளவில்லாத அன்பு பரிமாறி காதல் வயப்பட்டனர். இந்த ஜோடி சூப்பர் ஜோடி என பெயர் பெற்றதற்கு காரணம், பல படங்களில் இவர்கள் சேர்ந்து நடித்ததுதான்.
கிராமத்து நாயகனை மாடர்னாக மாற்றி பங்கு ராதிகாவுக்கே உண்டு. இவர்கள் திருமணம் செய்ய இருந்த நேரத்தில் பத்திரிகையாளர்கள் நடுவில் புகுந்து தேவையில்லாததை சொல்லி திருமணம் நின்று போனதாக இயக்குநரும் நடிகருமான விஜய் கிருஷ்ணராஜ் சமீபத்தில் பேட்டியில் கூறியுள்ளார்.
இதுகுறித்து நடிகரும் பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் ஒரு நிகழ்ச்சியில் ‘இருவரும் காதலித்து அந்த காதல் திருமணம் வரை சென்றது உண்மைதான் எனவும், அந்த கல்யாணத்துக்காக ராதிகா திருமணப் புடவை எல்லாம் எடுத்து வைத்து இருந்தநிலையில், விஜயகாந்தின் சில நண்பர்கள் அவரின் ஜாதகப்படி ராதிகா அவருக்கு சிறந்த மனைவியாக இருக்க மாட்டார் என சொன்னதால் விஜயகாந்த் தனது முடிவை மாற்றிக்கொண்டார்’ எனக் கூறியுள்ளார். இது இரண்டில் எது உண்மை என்பது இவர்கள் இருக்கு மட்டுமே தெரியும்.
ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக விஜய்காந்த் தமிழ் சினிமாவில் உருவானார். புரட்சிகரமான பாத்திரங்களில் நடித்து புரட்சி கலைஞர் என பெயர் பெற்றார். காதல் தோல்வியடைந்த பிறகு மனம் நொந்து போன ராதிகா, மன உளைச்சலுக்கு ஆளானதாக அப்போதே செய்தி வெளியானது நினைவுகூரத்தக்கது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.