கோலிவுட்டை குறி வைக்கும் பாலிவுட்… சல்மான் கான் படத்தில் அறிமுகமாகும் பிரபலம்!!
Author: Udayachandran RadhaKrishnan17 December 2024, 11:04 am
கோலிவுட்டில் கலக்கி வரும் பிரபலங்கள் அடுத்தடுத்து சிறந்த நடிப்பால் தென்னிந்திய சினிமா மற்றும் இந்தி சினிமாவுக்கு நுழைவது வழக்கம்.
சல்மான் கான் படத்தில் இணைந்த சந்தோஷ் நாராயணன்
ஆனால் பாலிவுட்டில் சமீப நாட்களாக தமிழ் சினிமா மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் ஹிட் அடித்த கதைகளை இந்தியில் தழுவி எடுக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்க: கைதுலாம் சும்மா.. அசால்ட்டு காட்டும் அல்லு அர்ஜுன்!
அதே சமயம் தமிழ் சினிமா பிரபலங்களை இந்தி சினிமா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று வருகிறது. சமீபத்தில் அட்லீ, கீர்த்தி சுரேஷ் என பட்டியல் ஏராளம் உண்டு.
அந்த வகையில் அடுத்ததாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாலிவுட்டில் நுழைகிறார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் சிக்கந்தர் படத்தில் சல்மான் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ப்ரீத்தம் சக்ரவர்த்தி இசையமைக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.