நடிகரின் அப்பாவை திட்டிய பிரபல இசையமைப்பாளர்; பல வருடங்கள் கழித்து வெளிவந்த உண்மை

Author: Sudha
21 July 2024, 4:51 pm

இளையராஜா எந்த அளவுக்கு புகழின் உச்சியில் இருக்கிறாரோ அதே அளவு சர்ச்சைகளையும் சந்தித்தவர். பிரதமர் மோடி குறித்து அவர் கூறிய கருத்து, ராஜ்யசபா எம்.பி ஆனது என அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும். அதேபோல் சில இயக்குநர்கள், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோருடனும் கருத்து வேறுபாடு எழுந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

இளையராஜா பற்றிய ஒரு தகவல் தற்போது பரவி வருகிறது.தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் பாக்யராஜ் தாவணிக் கனவுகள் படத்தை இயக்க இருந்த நேரத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது இளையராஜா 1 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டிருக்கிறார். அதற்குள் இவ்வளவு சம்பளத்தை அதிகமாக்கி விட்டீர்களே எனக் கேட்ட போது ஒருத்தன் இசை பற்றி தெரியாமயே படம் எடுத்துட்டு ஒரு லட்சம் சம்பளம் கேட்கிறான் எனச் சொன்னாராம்.

அந்த கால கட்டத்தில் படம் எடுத்து திரைக்கதை இயக்கம் வசனம் பாடல் இசை என ஒரு படத்தின் அனைத்து அம்சங்களையும் ஒருவராக செய்து ஹிட் படங்களை தந்தார் இயக்குனர் டி ராஜேந்தர். அவருடைய இசையில் வந்த பாடல்களும் ஹிட் அடித்தது. அதனால் இளையராஜா டி ராஜேந்தரைத்தான் குறிப்பிட்டு பேசியிருப்பார் என ஒரு தகவல் திரைத்துறையில் தற்போது கிசுகிசுக்கப் படுகிறது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!