சர்ப்ரைஸ்.! ‘குட் பேட் அக்லி’ பட ரிலீஸில் ட்விஸ்ட்…தமிழில் இதுவே முதல்முறை.!

Author: Selvan
12 March 2025, 7:13 pm

தமிழ் சினிமாவில் புதிய முயற்சி

அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “குட் பேட் அக்லி” படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படியுங்க: மரண மாஸ்.!மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் ரஜினிகாந்த்.!

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம்,அஜித்தின் வித்தியாசமான கெட்டப்புகளால் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க,மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது .

Good Bad Ugly trailer record

கடந்த மாதம் வெளியான “குட் பேட் அக்லி” படத்தின் டீசர் ரசிகர்களிடம் அதிரடி வரவேற்பை பெற்றது,குறிப்பாக, வாலி,அமர்க்களம்,பில்லா,ரெட் போன்ற அஜித்தின் பழைய வெற்றி படங்களை நினைவூட்டும் காட்சிகள் இதில் இடம் பெற்றிருந்தன,இதன் விளைவாக 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வைகளை கடந்த தமிழ் சினிமாவின் சாதனை டீசராக இது மாறியது .

இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாவதாக இருந்தாலும்,ரசிகர்களுக்காக ஏப்ரல் 9ஆம் தேதி இரவு 10 மணிக்கு சிறப்பு பிரீமியர் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன,இது தமிழ் திரையுலகில் முதல் முறையாக நடைபெறும் புதிய முயற்சி ஆகும்,இதனால் ரசிகர்கள் படத்தை காண மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!
  • Leave a Reply