சினிமாவில் 50 ஆண்டு சாதனை…ரீரிலீஸில் குதிக்கும் ரஜினியின் சூப்பர் ஹிட் திரைப்படம்…!
Author: Selvan5 January 2025, 4:57 pm
50 ஆண்டை கடந்து வெற்றி நடைபோடும் ரஜினி
தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த்.இவர் தமிழ் சினிமாவில் இன்று வரை அதே புத்துணர்ச்சியுடன் மாசான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
இவர் கிட்டத்தட்ட 171 படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவிற்கு இவர் வருகை தந்து 50 ஆண்டுகள் ஆகும் நிலையில் பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ஒரு சந்தோஷமான தகவலை பகிர்ந்துள்ளார்.
சமீப காலமாக தமிழ் சினிமாவில் பல ரீரிலீஸ் படங்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது,அந்த வகையில் ரஜினிகாந்தின் பாபா,கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு,ஆளவந்தான்,சூர்யா நடித்த வாரணம் ஆயிரம்,அஜித் நடித்த பில்லா,வாலி,விஜயின் கில்லி என பல படங்கள் ரீரிலீஸாக திரைக்கு வந்தன.சமீபத்தில் கூட ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி படம் வெளியாகி வசூலை அள்ளியது.
இதையும் படியுங்க: பெரும் சோகத்தில் ரிலீஸ் ஆகும் மதகஜராஜா…படத்தில் நடித்த பல பிரபலங்களின் நிலைமை என்ன ஆச்சுன்னு தெரியுமா ..!
அந்த வகையில் தற்போது ரஜினி 50 ஆண்டை கடந்து சினிமாவில் வெற்றிநடைப்போட்டு கொண்டிருக்கும் போது,அவரை சிறப்பிக்கும் விதமாக அவரது நடிப்பில் 150-வது படமாக வெளிவந்து மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த படையப்பா திரைப்படத்தை ரீரிலீஸ் செய்ய போவதாக இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.இதனால் ரசிகர்கள் அளவற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.