அப்பா பாவம் பா…..!? அப்பாவை கண்டுகொள்ளாமல் சென்ற விஜய், – வைரலாகும் வீடியோ !!!

Author: kavin kumar
3 January 2023, 7:30 pm

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கு தளபதி விஜயின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 24 அன்று நடந்தது.இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் நடிகர் விஜய். நடிகை விஜய் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே அரங்கத்திற்கு வந்த விஜயின் பெற்றோர் அம்மா ஷோபா மற்றும் அப்பா சந்திரசேகர் ஆகியோர் முன் வரிசையில் இருந்தார்கள்.

நடிகர் விஜய் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்தவுடன் அவர் அரங்கம் நோக்கி முதன் முதலாக வரும்போது, முன் வரிசையில் இருந்த அம்மா ஷோபா மற்றும் அப்பா சந்திரசேகர் ஆகியோர் எழுந்து நின்றனர். அப்பொழுது நடிகர் விஜய் முதலில் அம்மாவுக்கு கை கொடுத்த விஜய், பின்னர் அப்பாவுக்கு கை கொடுத்து விட்டு சடுதியாக அடுத்த நபர் நோக்கி முன்னேறிச் சென்றார். அவர் அப்பாவை கண்டுகொள்ளாதது போல இருந்தது. ஆனால்

சந்திரசேகரோ விடுவதாக இல்லை, இது தான் தருணம் என்று விஜயை கட்டிப் பிடிக்க கைகளை நீட்டினார். இதனால் சற்று சுதாரித்துக் கொண்ட நடிகர் விஜய் வேறு வழி இன்றி விருப்பம் இல்லாமல் அப்பாவை கட்டிப் பிடித்தார். இதனைப் பார்க்கும் போது, இன்னமும் விஜய் தனது அப்பா சந்திரசேகர்ருடன் நெருக்கம் இல்லாதது போல் தான் தெரிகிறது.

வாரிசு என்று படத்துக்கு பெயர் வைத்துவிட்டு குடும்பம் பற்றிய படத்திற்கு . ஆனால் விஜய் அங்கே அவர் அப்பாவையும் சரி, அம்மாவையும் சரி கட்டிப் பிடிக்கவே நெருக்கம் காட்டவோ இல்லை . நண்பர்களை கட்டிப் பிடித்த விஜய் பெற்றோர்களுக்கு கைகொடுத்து சென்றதை நெட்டிசன்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். கீழே வீடியோ இணைக்கப்பட்டுள்ளது .

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1113

    40

    38