சினிமாவை பொறுத்தவரை புதுமுகமாக அறிமுகமாகும் கலைஞர்கள் தங்களின் வறுமைக்காகவும், குடும்ப சூழலுக்காகவும், பணத்திற்காகவும் தவறான வழியில் செல்கிறார்கள். அப்படி வாடகைக்கு காசு இல்லாமல், டெலிபோன் பில் கட்டுவதற்கு கூட பணம் இல்லாமல், கஷ்டத்தில் இருந்ததால் செக்ஸ் படத்தில் நடிக்க தள்ளப்பட்டதாக நடிகர் வெற்றி விஜய் கூறியிருக்கிறார்.
80களில் வெளியான பல படங்களில் நடிகர் வெற்றி விஜயை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அப்பாவி தம்பியா, அம்மாஞ்சி இளைஞராக, அமெரிக்க மாப்பிள்ளையாக துணை கதாபாத்திரங்களில் நடித்த வெற்றி விஜய் திடீரென மலையாள செக்ஸ் படங்களில் நடிக்கச் சென்று விட்டார். நடிகர் வெற்றி விஜய் ஷகிலா, சித்ரா உள்ளிட்ட பலருடன் 25க்கு மேற்பட்ட ‘பிட்டு’ படம் என்று அழைக்கப்படும் செக்ஸ் படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் வெற்றி விஜய் அளித்த பேட்டியொன்றில், பல விஷயங்களை உருக்கமாக தெரிவித்திருக்கிறார். 25 வயது இருக்கும் போது வாடகை கொடுக்க காசு இல்லாமல் இருந்த போது தான் செக்ஸ் படத்தில் வாய்ப்பு கிடைத்து என்றும், 7 ஆயிரம் சம்பளத்திற்கு படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டதாகவும், ஒரு நாளைக்கு 7 ஆயிரம் , 10 ஆயிரம் என்றால், அப்போது எவ்வளவு பெரிய விசயம்? 500 ரூபாய் இருந்தால் போதும், வீட்டு வாடகை கட்டிடலாம்.
20 முதல் 26 வயது வரை, அழகான பெண்களுடன் ‘பிட்டு’ படத்தில் இருக்கலாம் என்கிற இயற்கையான ஆர்வமும் தனக்கு இருந்தது என்றும், பொண்ணுங்க அழகா இருக்காங்க, பணமும் வருது என, கண்ணை கட்டிக் கொண்டு, கொஞ்சம் கூட யோசிக்காமல் ‘பிட்டு’ படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் தான் நடிக்கும் போது குற்றவுணர்ச்சியாக இல்லை என்றும், ஆனால் தனக்கு பெண் பார்க்கும் போது தன்னை பார்த்த விதம் தான், ஏன் சினிமாவிற்குள் சென்றேன் என்ற எண்ணம் தோன்றியதாக தெரிவித்துள்ளார்.
ஆண்களுக்கும் சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் நடந்திருக்கிறது என்றும், லவ் பண்ணுறேன், திருமணம் செய்து கொள்ளலாம் என்று பலர் கேட்டு இருக்கிறார்கள். சினிமாவில் இருக்கும் நடிகைகளை தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், அந்த நடிகைகள் இப்போ எல்லாரும் குழந்தை குட்டியோட நன்றாக இருக்கிறார்கள்.
முன்னணி நடிகை ஒருவர் கூட தன்னை காதலித்தார் என்றும் அப்பேட்டியில் கூறியிருக்கிறார். கிளாமராக நடிக்க வருபவர்களுக்கு எந்த அளவிற்கு கஷ்டம் இருந்தால் அதில் நடிப்பார்கள் என்றும், செக்ஸ் இல்லாமல் உலகமும் இல்லை, நீங்கள் நான் என்று யாரும் இல்லை என நடிகர் வெற்றி விஜய் தெரிவித்துள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.