சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக திகழும் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக இருந்து வருகிறார். மணிவண்ணனிடம் உதவியாளராக பணியாற்றிய இவர் “முறை மாமன்” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.1995 ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வெற்றியை கண்டதால், சுந்தர் சி-க்கு திரையுலகில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
இதையும் படியுங்க: ராஜமௌலி தொடர் டார்ச்சர்…திருமணமே ஆகல…பிரபலம் தற்கொலை முடிவு.!
அதன்பின்பு இவர் எடுத்த படங்கள் எல்லாமே பக்கா குடும்ப கமர்சியல் படங்கள் என்பதால்,தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார்,
அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த சுந்தர் சி,இயக்குனராக மட்டுமின்றி நாயகனாகவும் தன்னை வெற்றிகரமாக நிலைநிறுத்திக் கொண்டார்.தொடர்ந்து இயக்குநர்,தயாரிப்பாளர் என பல்வேறு துறைகளில் பங்களித்து வந்த அவர்,கடந்த ஆண்டு வெளியான “அரண்மனை 4” திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றியை தொட்டார்.
இதையடுத்து, 2013 ஆம் ஆண்டு உருவான “மதகஜராஜா” திரைப்படம் பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம் வெளியானது.காலதாமதம் ஆனாலும் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது,நயன்தாராவை வைத்து “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இது ஒரு மிகப்பெரிய பிராஜெக்ட் எனக் கூறப்படுவதால்,ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
மேலும், சமீபத்தில் நடிகர் கார்த்தியுடன் சுந்தர் சி சந்திப்பு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், விரைவில் கார்த்தி-சுந்தர் சி கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளது.இந்த புதிய படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .இதனால் கார்த்திக்கு ஒரு தரமான பிளாக் பஸ்டர் படம் ரெடியாக இருக்கிறது.
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படம்தான் இட்லி கடை. ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள்…
This website uses cookies.