ரஜினி,விஜயை தொடர்ந்து ரீ-ரிலீஸில் குதிக்கும் பிரபல நடிகர்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

Author: Selvan
16 January 2025, 9:49 pm

ரீ ரிலீஸில் SK-யின் ரஜினிமுருகன்

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் தியேட்டரில் ரீ-ரிலீஸ் ஆகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Sivakarthikeyan Rajini Murugan re-release

அந்த வரிசையில் தற்போது டாப் நடிகர்களுக்கு போட்டியாக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயனின் படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.சின்னத்திரையில் அடியெடுத்து வைத்து பின்பு தன்னுடைய அசுர திறமையால் வெள்ளித்திரையில் நுழைந்த இவர் முதன்முதலாக மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார்,இதில் அவருடைய சம்பளம் வெறும் 10 ஆயிரம் மட்டுமே,அதன் பின்பு பல காமெடி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார்.

இதையும் படியுங்க: காதல் குறித்து மனம் திறந்த அனுப்பமா பரமேஸ்வரன்…வெளிப்படையா இப்படி சொல்லிட்டாரே..!

தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் தன்னுடைய 25வது படமான 1965 படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் 75 கோடி சம்பளமாக பெறுகிறார் என்ற தகவல் வெளியானது.இந்த நிலையில் 9 ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய நடிப்பில் காமெடி படமாக வெளிவந்த ரஜினிமுருகன் திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார்,மேலும் காமெடி நடிகர் சூரியும் சிவகார்த்திகேயன் வரும் காட்சிகள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.தற்போது ரஜினி முருகன் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

  • lokesh kanagaraj decided to take break from social media லோகேஷ் கனகராஜ் எடுத்த திடீர் முடிவு! என்ன சார் கடைசில இப்படி பண்ணிட்டீங்களே?