‘ஜனநாயகன்’ படத்தில் களமிறங்கும் முக்கிய இயக்குனர்கள்…விஜய் போட்ட ஸ்கெட்ச்சா.!

Author: Selvan
11 March 2025, 5:08 pm

கேமியோ ரோலில் இளம் இயக்குனர்கள்

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கி வருகிறார்.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இதையும் படியுங்க: அதிர்ச்சி.! பிரபல பாடகர் வீட்டில் மர்மமான முறையில் மரணம்..!

மேலும் பிரகாஷ் ராஜ்,கெளதம் வாசுதேவ் மேனன்,பிரியாமணி,மமிதா பைஜு,டிஜே அருணாச்சலம்,பாபி தியோல் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க,கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Vijay final film directors cameo

இது நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், ரசிகர்கள் மற்றும் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.விஜய், தனது அரசியல் பயணத்தைத் தொடங்க உள்ளதால், “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை அமைத்து, வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், ஜனநாயகன் படத்தில் இயக்குனர்கள் அட்லீ,லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இப்படத்தில் அவர்கள் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் விஜய்யிடம் கேள்விகள் கேட்கும் முக்கியமான காட்சியில் இடம்பெற்றுள்ளனர்.

இயக்குநர்களான அட்லீ, லோகேஷ், நெல்சன் ஆகியோர் விஜய்யுடன் நெருக்கமானவர்கள் என்பதால் இப்படத்தில் நடிக்க சம்பளம் ஏதும் வாங்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!
  • Leave a Reply