இரண்டு முறை கதை கேட்டும் மாரி செல்வராஜை ஒதுக்கிய பிரபல ஹீரோ..காரணம் இது தானா.!
Author: Selvan17 February 2025, 9:56 pm
மாரிசெல்வராஜ் கதையை கேட்டு NO சொன்ன ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் தன்னுடைய படங்கள் மூலம் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை விதைத்து வருபவர் இயக்குனர் மாரி செல்வராஜ்,இவருடைய படங்கள் முழுவதும் இவர் கடந்து வந்த வாழ்க்கையை மையப்படுத்தியும்,தன்னுடைய சமூகத்தில் நடக்கின்ற கொடுமைகளையும் காட்டும் விதமாக இருக்கும்.
இதையும் படியுங்க: அட ஆமா ..!கார்த்தியின் படத்தில் அப்போ குழந்தை…இப்போ அவருக்கே ஜோடி.!
அந்த வகையில் இவர் எடுத்துள்ள பரியேறும் பெருமாள்,கர்ணன்,மாமன்னன்,வாழை போன்ற படங்கள் மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று,வசூலையும் அள்ளியது.
இந்த நிலையில் இவர் பிரபல நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டுள்ளார்,அதன் காரணமாக அவரை இரண்டு முறை தொடர்பு கொண்டு கதை சொல்லியும்,அவர் நடிக்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் ஒரு முறை தயாரிப்பாளர் எஸ் தாணு ரஜினியிடம் அனுப்பியுள்ளார்,ஆனால் கதை கேட்ட பிறகு நடிக்க சம்மதம் அளிக்கவில்லை,தொடர்ந்து கமர்சியல் படங்களில் நடித்து, ரஜினிகாந்த் ரசிகர்களை கவர்ந்து வருவதால்,மாரி செல்வராஜ் கதையில் நடித்தால் தன்னுடைய இமேஜ் டேமேஜ் ஆகி விடும் என்பதால் நடிக்க மறுத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் கூறப்படுகிறது.
மாரிசெல்வராஜ் தற்போது துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை எடுத்து முடித்துள்ளார்,இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.