மனநோயாளியாக நடிக்க போகிறாரா விஜய்..?

Author: Rajesh
6 February 2022, 12:25 pm

தமிழில் மிக முக்கியமான முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இந்த நிலையில், விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. இதனிடையே, விஜய் சமீபத்தில் வெளியான பிகில் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். முன்னதாக அழகிய தமிழ் மகன் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். ஆனால் அந்த படம் அவர் எதிர்பார்த்த அளவு மக்களிடம் வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், விஜய்யின் 66-வது படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒரு கதாபாத்திரத்தில், தன்னை யாரோ காதலிப்பதைப் போன்று நினைத்தப்படியே இருக்கும், மனநோயால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க போகிறாராம். அவர் எப்படி காதலில் விழுகிறார் என்று வித்தியாசமான முறையில் கதைகளம் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் நிச்சயம் விஜய்யை மாறுப்பட் கோணத்தில் வெளியப்படுத்தும் என்றே சொல்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1358

    3

    0