திடுக்கிடும் ரயில் பயணம்…அலறிய சூரி…ஏழு கடல் ஏழு மலை படத்தின் திக் திக் ட்ரைலர் வெளியீடு..!
Author: Selvan20 January 2025, 7:58 pm
திகில் காட்சிகளுடன் வெளிவந்த ட்ரைலர்
இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவான ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தின் ட்ரைலரை படக்குழு இன்று வெளியிட்டது.
நிவின் பாலி,சூரி,அஞ்சலி ஆகியோர் இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.ஏற்கனவே படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில்,தற்போது படத்தின் ட்ரைலர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இதையும் படியுங்க: இயக்குனரான நடிகை தேவயானி : விருது வாங்கி அசத்தல்…குவியும் வாழ்த்துக்கள்..!
ட்ரைனில் தீபாவளி அன்று இரவில் பயணம் செய்யும் நிவின் பாலியும் சூரியும் எதார்த்தமாக சந்திக்கிறார்கள்,அப்போது அவர்களுக்கு நடுவே நடக்கும் கதையை மையமாக வைத்து இயக்குனர் ராம்,அவரது பாணியில் திகில் காட்சிகளுடன் எடுத்துள்ளார்.
இப்படத்தை மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.இப்படம் வருகின்ற மார்ச் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.