புது படங்களின் வருகையால் ரசிகர்கள் மகிழ்ச்சி
தமிழ் சினிமாவில் புதுப்படங்கள் என்றாலே காலம்காலமாக வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆவது வழக்கமான ஒன்று, அதாவது வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனால் அடுத்து வரக்கூடிய இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் வசூலை அள்ளலாம் என ஒவ்வொரு வாரமும் புது படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.
இதையும் படியுங்க: ஜப்பானில் சூப்பர்ஸ்டார்..அதிரடி ரிலீஸில் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படம்.!
அந்த வகையில் பெப்ரவரி 21 ஆம் தேதியான நாளை மொத்தம் 10 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.அதிலும் குறிப்பாக தனுஷ் தயாரித்து இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ட்ராகன் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்கின்றனர்.

அது கூடவே விமல் மற்றும் சூரி நடிப்பில் உருவான படவா திரைப்படம் 6 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வர உள்ளது.கடந்த மாதம் விஷால் நடிப்பில் வெளிவந்த மதகதராஜா திரைப்படம் 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் ஆகி வசூலை அள்ளியது மட்டுமில்லாமல் ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது,அதனால் தற்போது படவா படக்குழுவும் அதே நம்பிக்கையில் உள்ளது.
இந்த படங்கள் கூடவே ராமம் ராகவம்,கெட் செட் பேபி,பிறந்த நாள் வாழ்த்து,ஈடாட்டம்,ஆபீசர் ஆன் டூட்டி,விஷ்ணு பிரியா,பல்லாவரம் மனை எண் 666 உள்ளிட்ட 10 படங்கள் நாளை (பெப்ரவரி 21) ரிலீஸ் ஆகி சினிமா ரசிகர்களை குஷிப்படுத்த உள்ளது.