நாளை ஓடிடியில் குதிக்கும் படங்கள்…எந்த படத்துக்கு நீங்க வெயிட்டிங்.!

Author: Selvan
20 March 2025, 3:56 pm

தமிழ் சினிமா-நாளைய ஓடிடி வெளியீடுகள்

தமிழ் சினிமாவில் வாராவாரம் புதிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.திரையரங்குகளில் எப்படி புதிய படங்கள் வரவேற்பைப் பெறுகின்றனவோ,அதேபோல் ஓடிடி தளத்திலும் ரசிகர்கள் படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.அந்த வகையில் நாளை மார்ச் 21 ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்களை பற்றிப் பார்க்கலாம்.

இதையும் படியுங்க: ‘கேம் சேஞ்சர்’ தோல்விக்கு பிரபுதேவா தான் காரணம்..இசையமைப்பாளர் தமன் அட்டாக்.!

தனுஷ் இயக்கத்தில் வெளியான “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.திரையரங்கில் ஜொலிக்காத இந்தப்படம் OTT-யில் ரசிகர்களை கவருமா என்று பார்க்கலாம்.

Dragon Movie Netflix Release

அதனைத் தொடர்ந்து,அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில்,பிரதிப் ரங்கநாதன் தயாரிப்பில் உருவான “டிராகன்” திரைப்படம் தியேட்டரில் வசூல் ஆட்டம் போட்டது,இப்படம் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான “பேபி &பேபி ” திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாக உள்ளது.

பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் உருவான “Fire” திரைப்படம் டென்ட்கோட்டா ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது.

காதலர் தினத்தன்று வெளியான “தினசரி” திரைப்படமும் டென்ட்கோட்டா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

  • எல்லா படங்களும் விரும்பி நடிக்கல…ரகசியத்தை உடைத்த நடிகை ரேவதி.!
  • Leave a Reply