ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு ஜோடி பிரிவை அறிவித்த நிலையில், இதுவரை தமிழ் இசையமைப்பாளர்கள் விவாகரத்து பெற்ற விவரத்தை இதில் காணலாம்.
கோயம்புத்தூர்: “திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்து, சாய்ரா பானு தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானைப் பிரிந்து செல்லும் ஒரு கடினமான முடிவை எடுத்துள்ளார்” என சாய்ரா பானு தரப்பில், அவரது வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள வார்த்தைகள் இவை. இதனைக் கண்டு அதிர்ந்து போன ரசிகர்களுகு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
அது என்னவென்றால், “திருமண வாழ்க்கையில் 30 ஆண்டுகளை எட்டிவிடுவோம் என்று நாங்கள் நம்பினோம். ஆனால், இப்போது எதிர்பாராத முடிவு வந்துவிட்டது” என இதயம் கனத்து வார்த்தைகளை உதரி விட்டார் இசை அமைப்பாளரும், சாய்ரா பானுவின் கணவருமான ஏ.ஆர்.ரஹ்மான்.
இது போதாது என்று, “இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்” எனக் கூறி, வெந்த புண்ணில் மீண்டும் மீண்டும் வேலை பாய்ச்சினார் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன். இந்த ஜோடிக்கு கடந்த 1995ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
விவாகரத்தான தமிழ் இசையமைப்பாளர்கள்: முன்னதாக, இந்த வரிசையில் சில தமிழ் இசை அமைப்பாளர்கள் இருக்கின்றனர். அந்த வகையில், இளைஞர்களின் கனவு இசை நாயகனும், மாஸ்ட்ரோ இளையராஜாவின் மகனுமான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது முதல் மனைவி சுஜயா சந்திரன் மற்றும் இரண்டாவது மனைவி ஷில்பா மோகன் ஆகியோரை விவகாரத்து செய்தார்.
பாரம்பரிய இசைக் குடும்பத்தில் பிறந்த யுவன் சங்கர் ராஜாவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த நிலையில் தனது இரு மனைவிகளிடம் இருந்து விவாகரத்து பெற்ற யுவன் சங்கர் ராஜா, தற்போது ஷாஃப்ரூன் நிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: உடைந்து போன ஏ.ஆர்.ரஹ்மான்….கண்ணீருடன் பதிவு..!
அதேபோல், கிராமியை இசைப்பாடல்களுக்கு நவீன வடிவம் கொடுத்து, ஊர் இளவட்டங்களை திருவிழாக்களில் ஆட்டம் போட வைத்தவர் என இசை அமைப்பாளர் டி.இமானைச் சொல்லலாம். இவர் தனது மனைவியாக இருந்த மோனிகா ரிச்சர்டை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
மேலும், சமீபத்தில் சார்மிங் இசை அமைப்பாளராகவும், நடிகராகவும் உள்ள ஜி.வி.பிரகாஷ்குமார், தனது மனைவியும், பாடகியுமான சைந்தவியை பிரிவதாக அறிவித்தார். இவர்களது திருமண வாழ்க்கை கிட்டத்தட்ட 11 வருடங்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது.