விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதிக்கு திரைக்கு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இந்த படம் வெளியாக வெகு சில நாட்களே உள்ள நிலையில் அந்த படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி படத்தின் டிரைலர் வெளியானது. அதில் ஒரு காட்சியில் நடிகர் விஜய் வில்லனை கெட்ட வார்த்தையில் திட்டியிருப்பார். அது பீப் போடாமல் அப்படியே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து இப்படி சர்ச்சையில் சிக்கி வருவதால் விஜய் ரசிகர்கள் வேதனை அடைந்தனர். பொதுவாகவே முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது கண்டிப்பாக அதிகாலை நான்கு மணிக்கு எல்லாம் ரசிகர்களுக்காக படம் திரையிடப்படுவது வழக்கமாக இருந்து வந்தது.
ஆனால், சென்னையில் திரையரங்குக்கு வெளியே ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து விழுந்து இறந்ததை அடுத்து, ஜனவரி 2023 முதல் தமிழகத்தில் சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அதன்பிறகு, தமிழகத்தில் சிறப்புக் காட்சிகள்/ அதிகாலைக் காட்சிகள் நடத்த திரையரங்குகளுக்கு அரசு அனுமதிக்கவில்லை.
இதனால் விஜய்யின் ‘லியோ’ படத்தையும் தமிழ்நாட்டில் அதிகாலை 4 மணிக்கு ரிலீஸ் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் அண்டை மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ‘லியோ’ படம் அதிகாலையிலே திரையிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தமிழகத்திலும் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கக்கோரி தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது. மேலும், ‘‘சுகாதார பாதிப்பு மற்றும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதாமல், காவல் துறையின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்போடு போதிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்’’ என்று அரசுக்கு சுட்டிக் காட்டியது.
பின்னர் இதுகுறித்து அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசு, விஜய்யின் லியோ படம் தமிழகத்தில் முதல் 5 நாட்களுக்கு சிறப்புக் காட்சி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் ஒரு நாளைக்கு 5 காட்சிகள் வெளியிடப்படும். அதன்படி அக்டோபர் 19 முதல் 24 வரை 5 காட்சிகள் வெளியிடலாம். ஆனால், அதிகாலை 4 மணி காட்சி திரையிட அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அரசாணையில் “தளபதி விஜய்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. தமிழக அரசுக்கும் நடிகர் விஜய்க்கும் முரண்பாடு இருப்பதாக தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது. லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து முதல் ட்ரைலர் பொதுவெளியில் திரையிடப்படுவதை தடுத்தது வரை எல்லாமே ஆளுங்கட்சியின் சதி என பேசப்பட்டு வந்தது. ஆனால், அது எதுவுமே உண்மையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த அரசாணையில், விஜய்யை ” தளபதி விஜய் ” என குறிப்பிட்டுள்ளதால் பல சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது ஆளுங்கட்சி. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் சமூகவலைத்தளங்கள் முழுக்க இந்த தகவலை பரப்பி முதல்வர் முக ஸ்டாலினுக்கு தனிப்பட்ட முறையில் நன்றிகளையும் கூறி வருகிறார்கள்.
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது : இன்று நடைபெற்ற மருதமலை…
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜாகீர் (50) என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10…
This website uses cookies.